ஆதர்ஷ் வீட்டு வசதி கழகத்தில் உறவினர்களுக்கு வீடு வழங்குவதில் நடைபெற்ற ஊழல் வழக்கு காரணமாக முதல்வர் பதவியை அசோக்சவான் ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் யார் என்பதில் பிரித்விராஜ் சவான் மற்றும் பாலாசாகேப் விக்கே பாட்டில் ஆகியோரது பெயர்கள் அடிப்பட்டன. இந்நிலையில் மாநில மேலிட பொறுப்பாளர்களான பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள பிரித்விராஜ் சவான் பெயரை மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஏகமனதாக பரிந்துரைத்துள்ளனர். பரிந்துரைகளை கேட்டுக்கொண்டு டில்லி திரும்பிய அந்தோணியும், பிரணாபும் இன்று காலையில் டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர். சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரணாப் : மகாராஷ்டிரா காங்., எம்.எல்.ஏ., க்கள் பரிந்துரையை தலைவர் சோனியாவிடம் கூறியதாகவும் அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். நன்றி : தினமலர்
24 மணி நேரத்தில் அதிரடி : பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்குவதற்கு முன்னர் ஆதர்ஷ் ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மகா., முதல்வர் அசோக் சவான், காமன்வெல்த் ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாடி ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அந்தோணி , பிரணாப் மும்பை பயணம், மகா., காங்., எம்.எல்.ஏ., க்கள் கூட்டம் , டில்லியில் சோனியாவுடன் சந்திப்பு, என 24 மணி நேரத்தில் பரபரப்பு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ராகுல் கணிப்பு : மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் "தூய்மை'யானவராக இருப்பார். அவர் திறமையற்றவராக இருக்கும்பட்சத்தில், உடனடியாக திரும்பப்பெறப்படுவார்.இவ்வாறு ராகுல் கூறியிருந்தார். இந்நிலையில் பிருதிவிராஜ் சவான் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளது காங்., அரசியல் வட்டாரத்தில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் மேலிடம், சவானின் மத்திய அமைச்சர் பதவியின் அனுபவம் அவருக்கு மாநில அரசை கையாள உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் சவான் திறமைசாலி என பாராட்டியுள்ளது.
பிருதிவிராஜ் பேட்டி : முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக டில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் பிருதிவிராஜ் சவான். காங்கிரஸ் கட்சி மேலிடம் தன்னை மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்கும் படி கேட்டுக்கொண்டதாகவும், அந்த வேண்டுகோளை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். கூட்டணி கட்சிகள் ஆதரவு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இன்று மாலை மும்பை செல்வதாக கூறினார். பிரதமர் மன்மோகன்சிங் மத்திய இணை அமைச்சர் பொறுப்புக்களில் இருந்து தன்னை விடுவித்துவிட்டதாக கூறினார்.
நாளை பதவியேற்பு : இன்று மாலை மும்பை செல்லும் பிருதிவிராஜ் சவான் , கவர்னர் சங்கரநாராயணனை சந்திப்பார் என தெரிகறிது. நாளை அவர் முதல்வராக பதவியேற்றுக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக