ஹம்துன் அஷ்ரப்

10 நவ., 2010

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பது எப்படி?

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், நவம்பர் 10, 2010 No comments


உடற்பயிற்சி செய்துவந்தால், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பலநோய்கள் அண்டாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வறிஞர் ஹன்னா ஆரெம் என்பவர் தன் ஆய்வுகளின் படி, வாரத்துக்கு சுமார் இரண்டரை மணி நேரமாவது உடல் பயிற்சி செய்யும் பெண்களை கர்ப்பப் பை புற்றுநோய் தாக்குவதில்லை என்று கூறியுள்ளார்.


பொதுவாக, நாற்பது வயதுக்கு மேல் பெண்களை மிரட்டும் நோய்களில் தலையாய இடம் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு உரியது. இந்த நோயைத் தடுக்க வாரத்துக்கு சுமார் இரண்டரை மணி நேரமாவது உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்று ஹன்னா ஆரெம் கூறுகிறார்.

மேலும் குண்டான பெண்கள் கூட உடல் பயிற்சி செய்தால் கர்ப்பப்பை புற்றுநோயைத் தவிர்க்க முடியும் என்று சுமார் 6,000 பெண்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் அறிய முடிந்திருக்கிறது.

உடற் பயிற்சி என்று தனியாக நேரம் ஒதுக்கி செய்ய முடியாவிட்டாலும் கடுமையாக உடல் உழைப்பு செய்கிறவர்களுக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் வராது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அத்துடன் புற்றுநோய் மட்டும் அல்லாமல் வேறு சில நோய்களையும் உடற் பயிற்சி தடுக்கிறது என்கிறார் ஹன்னா.

நன்றி; http://www.inneram.com

0 கருத்துகள்: