ஹம்துன் அஷ்ரப்

2 மார்., 2009

தபால் நிலையத்தில் இனி மருந்துகள் வாங்கலாம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மார்ச் 02, 2009 No comments

இந்திய தபால் தந்தி துறை ரூ.500 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த நஷ்டத்தை சரிகட்டுவதற்காக அத்யாவசிய மருந்துகளையும், பிற பொருட்களையும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வந்தது.வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறை ப்படுத்தப்படலாமென்று தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 9,124 கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களிலும் இத்திட்டம் துவக்கப்பட உள்ளது.ஆஸ்பிரின், பாராசிட்டமால் போன்ற தலைவலி, காய்ச்சல், இருமலுக்கான மருந்துகள், வைட்டமின், தாதுக்கள் மருந்து, பிற பொது மருந்துகள் இவற்றில் விற்பனை செய்யப்பட உள்ளது. அது மட்டுமின்றி, சாதாரண பசை போன்ற, எழுதுபொருட்கள் கடைகளில் கிடைக்கும் பொருட்களும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட திட்டம் உள்ளது. சாதாரண மக்களும் இணைய தள வசதியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தபால் நிலையங்களில் இணைய தள வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர்வாசிகள் குறைந்த கட்டணத்தில், கணினி கல்வி பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.பரிட்சார்த்த கட்டமாக தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு தபால் நிலையங்களில் வணிக ரீதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.மற்ற கடைகளை விட விலை குறைவாகவும் அதே சமயம், விற்பனையாளர்களுக்கு விற்பனை ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றும் இத்திட்டம் வெற்றி பெறும் என்று நம்புவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி;
இந்நேரம்

0 கருத்துகள்: