-
PORTONOVO MASJID
This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]
-
MARINE BIOLOGY
This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]
-
PORTONOVO LIGHT HOUSE
This is the PORTONOVO LIGHT HOUSE. [...]
- #
#
10 ஏப்., 2009
17 மார்., 2009
வினோத குரங்கு ?
..ச்சேச்சே..உங்க ஊருக்கு வந்தது (?) நான் இல்லே நான் சுத்த சைவம், உங்க ஊருக்கு வந்து பிரியாணில்லாம் சாப்பிட நம்மால் முடியாது.
ஆமாம், நேத்து சாயங்காலம் அவரு பார்த்தாராம், செல்போன எடுத்துட்டு வந்து போட்டோ எடுக்குறத்துகுள்ள ஓடிடிச்சாம், இவரு வூட்டு மாடிலே தான் தங்கி இருந்திச்சாம்" இப்படி மணிக்கொருதரம் மெருகூட்டப்படும் கலவையான கருத்துக்களுடன், பரங்கிப்பேட்டை பகுதி பரபரப்பின் பிடியில் ஆழ்ந்து போய் இருக்கின்றது, எல்லாம் ஒரு குரங்கு செய்த சேஷ்டை தான், அது பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.
பரங்கிப்பேட்டை தோணித்துறை பகுதியில் மனித குரங்கு (?) உலாவுவதாக பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பகலிலும், சில நேரங்களில் இரவிலும் நடமாடுகின்றது என்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த குரங்கின், முகம், கை-கால் ஆகியவை கறுப்பு நிறத்தில் இருப்பதாக சிலர் வதந்தியை பரப்பியுள்ளதாக தினமலர் நாளேடு (15-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.
சாதரணமான குரங்குகளை விட சற்று வினோதமாக காணப்படுவதாகவும், கரடி போல் அதிகமாக முடி உள்ளதாகவும், மேலும், இந்த குரங்கு நேற்று முன்தினம் ரேவு மெயின் ரோடு, ஆற்றங்கரை தெரு போன்ற பகுதிகளிலும் சுற்றி வந்ததாகவும், தினத்தந்தி நாளேடு (16-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பு: படத்தில் இடம் பெற்றுள்ள புகைப்படம் - மாடல்
15 மார்., 2009
14 மார்., 2009
ரோ(ஓ)டு போட்டாச்சு...!!!
தமிழ் கூறும் நல்லுலகத்தில் புதியதாக ஆராய்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட பல சொலவடைகளில் இதுவும் பிரசித்தி பெற்ற ஒன்று தான், அது என்ன தெரியுமா?
"கோடு போட சொன்னால் போதும் ரோடே போட்டுவிடுவார்கள்" என்பது தான்
மழைக்காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை முதல் படத்திலும்,
குளிர் காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை இரண்டாவது படத்திலும்
கோடை காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை மூன்றாம், நான்காம் படத்திலும் கண்டு களியுங்கள் (?!)
இப்போது-அப்போது என்று காத்திருந்து வெறுத்து போன திருவாளர் பொதுஜனம் தனது பங்காக சாலைகளில் இருக்கும் பள்ளத்தை ஓடுகளை கொண்டு நிரப்பி விட்டார். பரங்கிப்பேட்டை நகரின் பெரும்பாலான தெருக்களில் சாலைகள் போடப்பட்டிருக்கையில் இந்த காஜியார் தெரு மட்டும் தார் வாடையை நுகராமல்
இருப்பது ஏனோ ?
12 மார்., 2009
சிறுபாண்மை இனத்தினர்காக அனைவர்க்கும் கல்வி
ஜெர்மனியில் 17 வயது மாணவன் சுட்டு 15 பேர் பலி
நன்றி; இந்நேரம்
திடீர் மழை : 40 செம்மறி ஆடுகள் பலி
புதுச்சத்திரம் அருகே திடீர் மழையால் 40 செம்மறி ஆடுகள் இறந்தன. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர்காட்டுச்சாகை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர், 300க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்காக புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு கிராம வயல் வெளியில் செம்மறி ஆடுகளை தங்க வைத்து, மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையில், செம்மறி ஆடுகள் மழையில் நனைந்தன.
நேற்று காலை திடீரென 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் இறந்தன. இதனால் பெரியப்பட்டு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பெரியப்பட்டு ஊராட்சி தலைவர் கஸ்தூரி பரங்கிப்பேட்டை கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை டாக்டர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். திடீர் மழை காரணமாக உஷ்ணம் அதிகரித்தும், குளிர் தாங்கமுடியாமலும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர் 12-03-2009
11 மார்., 2009
இறப்புச்செய்தி
10 மார்., 2009
மாறிவரும் வானிலை
மழைக்காலம் ?!
9 மார்., 2009
மூடப்பட்டிருக்க வேண்டும் டாஷ்மார்க்
நன்றி;
மைபிஎன் ஒ.காம்
மழையும்-மனசும்
கவிழ்ந்தது டெம்போ..
அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ வாகனத்தை இயக்க முடியாத சூழ்நிலையில், தகவலறிந்த பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகம் தனது ஆம்புலன்ஸ் வாகனத்தை உடனடியாக அனுப்பி, கவலைக்கிடமான நோயாளிகளை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பேருதவி புரிந்தது. இவ்விபத்தில் காயமடைந்தவர்களை பேரூராட்சி மன்ற தலைவரும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான முஹம்மது யூனுஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
7 மார்., 2009
தள்ளு வண்டி
5 மார்., 2009
உண்ணாவிரதம்
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும், வருகிற 10-ந்தேதி அதிமுக சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். மற்ற மாவட்டத் தலை நகரங்களில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப் போராட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். அதில் முதலில் எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு நிதியை அளித்து தொடங்கி வைக்க உள்ளேன். அந்தந்த மாவட்டங்களில் வைக்கப்படும் உண்டியலில் செலுத்தப்படும் நிதிகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் பின்னர் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.என்று கூறியுள்ளார்.
தெருமுனை பிரச்சார கூட்டம்
கதிரவனும்..... காலைப் பனியும்...!!!
இதற்கிடையில் காலை-மாலை நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு நேரத்தில் தொடங்கும் பனி காலை 8 மணி வரை நீடித்து சாலைகளில் பனி மூட்டமாக காட்சியளிக்கின்றது, மேலும் இப்பனியின் காரணமாக குழந்தைகள் காய்ச்சலால் அவதிப்படுகின்றார்கள்.
4 மார்., 2009
தமிழக அரசு அழைப்பு
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்.
தமிழக ஹஜ் கமிட்டி ,
ரோஸி டவர் (மூன்றாம் தளம்)
எண்; 13, மகாத்மா காந்தி சாலை,
நுங்கம் பாக்கம் - சென்னை
3 மார்., 2009
இலவச பயிற்சி பெறலாம்
வேலையில்லாத சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.
தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.வேலையில்லாத சிறுபான்மையின் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மையின் இளைஞர்கள் பயிற்சிபெற தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு கீழ்கண்ட இலவச திறன் வளர்ச்சி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
1. Hardware and Networking ,
2 C, C++
3,DTP,
4,Tally, with MS office
(10-வது வகுப்பில் தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள், மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)இப்பயிற்சி கீழ்க்காணும் இடங்களில் அளிக்கப்பட உள்ளன,சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, திருவள்ளுர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, அரியலூர், தேனி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகர்கோவில், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, சிவகங்கை,இராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, தாராபுரம், விருத்தாச்சலம், சிதம்பரம், திண்டிவனம், மார்த்தாண்டம், தக்கலை, திருச்செந்தூர், நாசரேத், கோவில்பட்டி, ஆரணி, செய்யார், போளுர், செங்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், ஆத்தூர், இராசிபுரம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, குடியாத்தம்,பேரணாம்பட்டு, அரக்கோணம், பள்ளப்பட்டி, அரவங்குறிச்சி, குளித்தலை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், இளையாங்குடி, தேவக்கோட்டை, திருவெறும்பூர், திருச்செங்கோடு, நாமக்கல், ஆண்டிப்பட்டி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பூந்தமல்லி,கூத்தாநல்லூர், பர்க்கூர்,தர்மபுரி, ஓசூர், பொள்ளாச்சி, திருப்பூர், மேலப்பாளையம், விருதுநகர், கடலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டிணம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஊட்டி, புளியங்குடி, கடயநல்லூர், தென்காசி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, குன்ணூர், மேட்டுப்பாளையம்.சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாநகரங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
5. Multimedia @ Animation
(10-வது வகுப்பில் தேர்ச்சி (அ) தோல்வி அடைந்தவர்கள், (ம) மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)
6. Dot.net (.net)
(பட்டதாரிகளும் (ம) பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)இப்பயிற்சியில் சேர்வதற்குக் கீழ்கண்ட தகுதிகள் இருத்தல் வேண்டும்.
- பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1,00,000/க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- மாணவ/மாணவியர் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.(இசுலாமியர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சீயர்கள்)சமர்ப்பிக்கப்பட்ட வேண்டிய ஆவணங்கள் (நகல்கள் மட்டும்)
- சாதிச் சான்றிதழ் நகல்
- குறைந்த பட்சம் 10லிஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் அதற்குமேல் படித்திருப்பின் அதற்குரிய நகல்களை இணைக்கலாம்.
- வருமான சான்றிதழ் நகல்4) பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ் நகல்.
நிறுவனங்கள் மூலம் இப்பயிற்சி அளிக்கப்படும். - பயிற்சி அளிக்கப்படும் விவரங்கள் CSC ComputerEudcation (தொலைபேசி எண் Chennai 044 - 25393783, 65698566) மூலம் மேற் குறிப்பிட்ட எல்லா 92 இடங்களிலும்.
IECT(தொலைபேசி எண். 044-42066684/85) மூலம் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் , புதுக்கோட்டை ஆகிய இடங்களில்.
Hindustan Sorfware Ltd(தொலைபேசி எண், 044-28511411,2,3) மூலம் மதுரை, கோயம்பத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில். Jayaram InfoTech (தொலைபேசி எண், 98421 58228, 9894288350) மூலம் அரியலூர், பெரம்பலூர், நாகபட்டிணம், கோயம்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில். Students Software training (
தெலைபேசி எண், 98847 58845) மூலம் தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், நாகபட்டிணம் (ம) மதுரை ஆகிய இடங்களில்.பயிற்சியில் சேர விரும்பும் மாணவ/மாணவியர்கள் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் உடனே சேர்ந்து பயிற்சி பெறலாம்.
இப்பயிற்சியின் மூலம் 8818 சிறுபான்மையின் மாணவ/ மாணவியர்கள் பயனடைவார்கள்.
நன்றி;
அதிரைpost
2 மார்., 2009
தபால் நிலையத்தில் இனி மருந்துகள் வாங்கலாம்
இந்நிலையில், இந்த நஷ்டத்தை சரிகட்டுவதற்காக அத்யாவசிய மருந்துகளையும், பிற பொருட்களையும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வந்தது.வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறை ப்படுத்தப்படலாமென்று தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 9,124 கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களிலும் இத்திட்டம் துவக்கப்பட உள்ளது.ஆஸ்பிரின், பாராசிட்டமால் போன்ற தலைவலி, காய்ச்சல், இருமலுக்கான மருந்துகள், வைட்டமின், தாதுக்கள் மருந்து, பிற பொது மருந்துகள் இவற்றில் விற்பனை செய்யப்பட உள்ளது. அது மட்டுமின்றி, சாதாரண பசை போன்ற, எழுதுபொருட்கள் கடைகளில் கிடைக்கும் பொருட்களும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட திட்டம் உள்ளது. சாதாரண மக்களும் இணைய தள வசதியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தபால் நிலையங்களில் இணைய தள வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர்வாசிகள் குறைந்த கட்டணத்தில், கணினி கல்வி பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.பரிட்சார்த்த கட்டமாக தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு தபால் நிலையங்களில் வணிக ரீதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.மற்ற கடைகளை விட விலை குறைவாகவும் அதே சமயம், விற்பனையாளர்களுக்கு விற்பனை ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றும் இத்திட்டம் வெற்றி பெறும் என்று நம்புவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி;
இந்நேரம்
1 மார்., 2009
புத்தக கண்காட்சி
துவங்கியது. சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் அமைக்கபட்டுள்ள இந்த புத்தக திருவிழாவில்
பல் வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளன
வரும் 8ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைப்பெறும்.
தொடக்கவிழாவில் பேராசிரியை.பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அண்ணா மலை பல்கலைக்கழக துணைவேந்தர் திரு, ராமநாதன் புத்தக கண் காட்சியை துவக்கிவைத்தார்.
அரசு மருத்துவமனையில்...
ஓன்றிய பெருந்தலைவர் முத்துபெருமாள், பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ், பேரூராட்சி மன்ற துனை தலைவர் செழியன்
தி.மு.க. நகரசெயலாளர் பாண்டியன், இளைஞர் அணி முனைவர் ஹீசைன், பைசல், கவுன்சிலர்கள் பாவாஜான், ஹாஜா கமால்,அபாகான்,
தி.மு.க. முன்னோடிகள் தங்கவேல், Eng. அருள்வாசகம், கோமு, ஆரிபுல்லா, ஜாபர்,ஹாரிஸ். மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
28 பிப்., 2009
குறைகிறது கட்டணங்கள்
மார்ச் 1-ஆம் தேதி முதல் பி.எஸ். என்.எல். நிறுவனம் லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசுகளாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசுகளாகவும் குறைக்கிறது.
இத்தகவலை மாநிலங்களவையில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்தார்.
இந்தியா கோல்டன் 50 என்ற புதிய திட்டம் மூலம் பிரீபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு எஸ்.டி.டி. கட்டணம் 50 காசுகளாக குறைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே - 95 என்ற எண்ணை உபயோகித்து எஸ்.டி.டி. பேசும் வசதி, பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக பி.எஸ். என்.எல். நிறுவனம் தெரி வித்துள்ளது. தற்போது, இந்த வசதியை வைத்து இருக்கும் சந்தாதாரர்கள் இனி மேல் எஸ்.டி.டி. பேசுவதற்கு 0 என்ற எண்ணை உபயோகிக்க வேண்டும் என்றும் பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.
நன்றி;
இந்நேரம்
27 பிப்., 2009
தயக்கம் ஏன்! எழுதப் பழகுங்கள்!!
இஸ்லாத்திற்கு எதிராக பனிப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிராக நடத்தும் எழுத்து மற்றும் கருத்துப்போரை பார்க்கும்போது அந்த பனிப்போர் உச்சத்தை அடைந்துவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள். அதைப்போல நாலொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிருப்பதால் தொலைகாட்சி கேட்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் விழ வைத்திருக்கிறார்கள். இதற்கு முஸ்லிம் அல்லாதவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நமக்கு பல சான்றுகள் தருகின்றன.ராவுத்தர்கள் எடுக்கும் படத்தில்கூட முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். அதே போல முஸ்லிம் அல்லாதவர்கள் நடத்தும் இணையதளத்தில் ஒரு முஸ்லிம் இந்துமதத்தைப் பற்றி எழுதினால் வரவேற்கிறார்கள், பதிவு செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப்பற்றி எந்த செய்தியும் பதிவு செய்வதில்லை. (அப்படியே பதிவு செய்தாலும் அது தர்கா புராணமாகத்தான் இருக்கும்).காந்தியை கொன்ற கோட்சே 'அவர்' என்று மரியாதையாகவும் சந்தேக கேஸில் மாட்டிக்கொண்ட முஸ்லிம்களை 'அவன்' என்று மரியாதை குறைவாகவும் செய்திகள் வெளியிடுவை பார்க்கலாம்.இதற்கு தூபம் போடத்தான் அன்றே, பாட நூல்களில் மொகலாயர்களின் படையெடுப்பு, ஆரியர்களின் வருகை என்று ஆக்கிவிட்டார்கள் போலும்.ஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற மீடியா, இன்னொரு பக்கம் தீவிர வாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று செய்திப்பத்திரிக்கைகளை புரட்டினால் பி.ஜே.பி அல்லது ஆர்.எஸ்.எஸ் செய்திதான் அதிக இடத்தை பிடித்திருக்கிறது. ஒரு குக்கிராமத்தில் இவர்களின் கூட்டம் நடந்தால் கூட அது வெளிச்சப் படுத்தப்படுகிறது.அவர்களுக்கு முஸ்லிம்களை தன் வலையினுள் கொண்டுவருவது மிகச்சுலபம். ஆட்டோ ஓட்டுகிறாயா? வா! எங்களின் ஆட்டோ சங்கத்தில் இணைந்துக்கொள். கார் ஓட்டுகிறாயா? வா எங்கள் கார் சங்கத்தில் இணைந்துக்கொள். எங்கள் தலைவர் பி.ஜே.பி என பேத்தலாம்.எங்கள் தலைவரின் தலைவர் ஆர்.எஸ்.எஸ். -ல் அங்கம் வகிக்கலாம். ஆனால் மனிதர்களுக்கு உதவும் நல்மனம் கொண்டவர். அவரின் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருக்கலாம். அவர் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல என்று முஸ்லிம்களை மூலைச்சலவை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வகுப்பு சண்டைகள் நடந்த இடத்தின் வரலாற்றைப் புரட்டி பார்ப்போமேயானால் ஒன்றை மிகத்தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.இவர்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர்தானே, நண்பரின் சகோதரி தானே, குழுந்தைதானே என்றெல்லாம் எந்த எண்ணமும் வருவதில்லை. முஸ்லிம் என்றால் பரவாயில்லை கற்பழிக்கலாம், கொல்லலாம், கண்டந்துண்டுகளாக வெட்டலாம், உயிருடன் எரிக்கலாம் என்றுதான் இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள், இல்லையில்லை புரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். குஜராத்தின் சம்பவம்தான் இதற்கு வெட்ட வெளிச்சம். குஜராத் மோடியின் மனிதப் படுகொலைக்காக குரல் கொடுத்த கவிஞர்களின் சில வரிகளை இங்கேஉங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
கவிக்கோ அப்துல் ரகுமான்:முன்பு இந்துத்துவா என்றால்பாரதப் பண்பாடு
இப்போதுகர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்துசிசுக் கருவைஎடுத்துத் தீயில் வீசுதல்
கவிஞர் இன்குலாப்எரியும் கொழுந்துகளில்ஆண்கள்பெண்கள்வகிர்ந்த வயிற்றிலிருந்துகுருதி சொட்டும்கொப்புள் கொடியோடுகண் விழிக்காதகருவறைச் சிசுக்கள்
கவிஞர் பொன்னீலன்குறிகளுடனும் குண்டாந்தடிகளுடனும்வாள்களுடனும்,சூலாயுதங்களுடனும்மறுபடியும்குகை விட்டுக் கிளம்பின - அந்தக்கற்கால மிருகங்கள்....நிறைச் சூலி வயிறுகீறிகண் திறவா பசும் குருத்தைகோரைப் பற்கள் துருத்தும்கடைவாயில் சிவப்பொழுககிழித்துக் கிழித்துவிழுங்கி ஆனந்தித்தன.
கவிஞர் சுகுணா திவாகர்சுன்னத் குறியினரை தேடியலையும்வாளின் பசி முன்கையறு நிலையன்றி யாதுமில்லைமறைப்பதற்கோ, காட்டிக்கொடுப்பதற்கோவென்றாயின அடையாளங்கள்
இப்படிப்பட்டவர்களிடம் கட்டைப் பஞ்சாயத்து நீதிக்கென கதவைத் தட்டுகிறார்கள். வாடகை வீட்டை காலி செய்யனுமா? வா நம் அண்ணனிடம் போகலாம் என்று முஸ்லிம்களை அழித்தொழிப்பவர்களிடமே தஞ்சம் போகிறார்கள். வரப்பு யாருக்குச் சொந்தம் என்ற சண்டை வக்கீலிடம் போனால் வயல் வக்கீலுக்கு சொந்தமாகிவிட்டது என்பார்கள். அதுபோலத்தான்.அண்ணன் தம்பி பிரச்சினைக்கு தாதாக்களிடம் கட்டைப்பஞ்சாயத்துக்கு போக, சொத்து அண்ணனுக்கும் அல்ல தம்பிக்கும் அல்ல அவர்களுக்கு ஆகிவிடுகிறது. குரங்கு அப்பத்தை பங்கு போட்ட கதைதான்.சரி இதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் எப்பொழுது சமூகத்திற்கு சுட்டிக்காட்ட போகிறீர்கள்?. இத்தகைய அநியாயங்களை தோலுரித்துக் காட்டுவது நம் அனைவரின் பணியல்லவா?எழுதப்பழகுங்கள்! உங்களுக்கென்று பல மக்கள் மன்றங்கள், விவாத அரங்குகள், வலைப்பூக்கள் இணையத்தில் இருக்கின்றது.படியுங்கள், கண்ணியமாக கருத்துச் சொல்ல பழகுங்கள் பல இணையதளங்கள் இருக்கின்றது. உங்கள் எழுத்தினால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன்கிடைக்குமா என்று பார்த்து எழுதுங்கள் (புகழுக்காக அல்ல.அதிகமாக எழுதுபவர்களை, அவர்களுக்கு ஃப்ரீ நேரம் இருக்கிறது என்று விமர்ச்சிக்கிறார்கள். அதிகமான எழுத்தாளர்கள் அவர்களின் தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு, நண்பர்களிடம் பிரச்சினைகளை பகிர்வதை விட்டுவிட்டு, மனைவி குழந்தைகளிடம சந்தோசமாக பேசிமகிழும் நேரத்தை குறைத்துக்கொண்டு, வெளியில் ஜாலியாக போய் சுற்றுவதை நிறுத்திக் கொண்டு எழுதுகிறார்கள் என்பதுதான் உண்மை.தயக்கம் ஏன் தோழர்களே!எழுதப் பழகுங்கள்!!புதிய சரித்திரம் படைத்திடுங்கள்!!!
நன்றி:
ஏகத்துவ ஆசியருக்கு...
26 பிப்., 2009
ஊழல்
நன்றி;
இந்நேரம்
23 பிப்., 2009
ஆசிரியரா இவர் ???
கடுமையாக சித்தரவதை செய்யப்பட்டு தாக்கப்படார்.இந்த சம்பவம் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் முன்னிலையில் நடந்ததுதான் கொடுமையிலும்,கொடுமை. +2, தேர்வு நெருங்கிவரும் நிலையில் மாணவிகள் எதிரில் காட்டுமிராண்டி தனமாய் நடந்துக்கொண்ட அந்த ஆசிரியர் மீண்டும் இதே பள்ளியில் பணியில் அமர்த்தப்படாமல் தகுந்த தண்டனை கொடுக்கப்படவேண்டும்
பெண்கள் பள்ளியில் இதுப்போன்ற சம்பவங்கள் இனி நடைப்பெறாமல் இருக்க
பெண் ஆசிரியர்கள் அதிகளவில் இந்த பள்ளியில் நியமிக்கப்படவேண்டும் ஆண் ஆசிரியர்கள் பள்ளியை விட்டு மாற்றப்படவேண்டும்.நமது இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் இந்த விசயத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்வரவேண்டும்.
22 பிப்., 2009
பதவியேற்ப்பு
இன்று காலை 10.30,மணியளவில் ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பதவியேற்பு விழா நடைப்பெற்றது
விழாவில் ஜனாப்,B.ஹமீது கெளஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். ஜனாப், கலிமா,K.ஷேக் அப்துல் காதர்(நவாப்ஜான் நானா) தலமையேற்க்க, ஹாஜி,அப்துல் சமது ராஷதி கிராத் ஓதினார்.
ஜமாத் சார்பாக அமைக்கப்பட்ட தேர்தல் குழு தலைவர் ஜனாப்,ஹாஜி.Y. அஜிஸ் மியான் அவர்கள் தலைவருக்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
தலைவர் தனது உரையில்
ஜமாத்தில் கூடியவிரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கபடுவார்கள் என்றார்.
இளைஞர்களுக்கு முக்கியதுவம் கொடுத்து அவர்களின் குறைகளை கழைய குழு அமைக்கப்படும் என்றார்.
பெண்களுக்கு ஓட்டுரிமைகுறித்தும், வெளிநாட்டில் வசிக்கும் பரங்கிப்பேட்டை முஸ்லிம் சகோதரர்களுக்கு ஓட்டுரிமை குறித்தும் கலந்துஅலோசிக்கப்படும் என்றார்.
தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட தலைவர், தான் தோல்வியடைய பல்வேறு சூழ்சிக்கள் தோன்றியது என்றும் அதில் ஒன்றுதான் பெண்கள் ஜமாத் என்ற பெயரில் வெளிவந்ததாகவும் இது எனது வளர்சியில் பொறாமைக்கொண்ட மாற்று சமுகத்தவர்களால் பின்னால் இருந்துக்கொண்டு இயக்கபட்டது கூறினார்.
அடுத்ததாக ஜமாத் வளர்சிக்கு பொதுமக்கள் தானாகவே முன்வந்து நிதி கொடுக்கவேண்டும் எனகேட்டுக்கொண்ட தலைவர் இவ்வளவு பெரிய ஊரில் ஜமாத் சந்தா தொகை ரூபாய்,1400 மட்டும் வசூலாவது மிகவுக் குறைவானது எனவும் ஜமாத் வளர்சிக்கு முக்கிய பங்கு வெளிநாட்டு வாழ் நமதூர் முஸ்லிம் சகோதரர்களுடையது என்றும் இந்த அமைப்புக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
தலைவருக்கு, உலமாக்கள்,அமைப்புசார்ந்தவர்கள், தனி நபர்கள், பரங்கிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்.திரு,ராமபாண்டியன்,மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்
அதனுடன் சேர்ந்து நமது ஊர் உலகச் செய்திகள் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.
21 பிப்., 2009
மாற்றம்
விடிவு காலம் பிறக்குமோ?
நீங்கள் புகைப்படத்தில் பார்ப்பது பரங்கிப்பேட்டை பேருராட்சியில் ஆறாவது வார்டில் இருக்கும் காஜியார் தெரு.
20 பிப்., 2009
நன்றி அறிவிப்பு....