ஹம்துன் அஷ்ரப்

12 ஜன., 2011

பரங்கிப்பேட்டை அருகே சாலை மறியல்.- வெள்ள நிவாரணம் கோரி!

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜனவரி 12, 2011 No comments

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, கடந்த இருவாரங்களுக்கு முன், பரங்கிப்பேட்டை பு.முட்லூரில்   கடலூர் - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் வகையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்ற போது அனைவருக்கும் நிவாரணம் வழங்குவோம் என வருவாய்த் துறையினர் உறுதியளித்திருந்தது தெரிந்ததே. 


 இதைத் தொடர்ந்து நிவாரணம் வழங்க வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பு.முட்லூர், மஞ்சக்குழி பகுதிகளில் கணக்கெடுத்தும் கணக்கெடுத்ததை விட குறைவான நபர்களுக்கு வழங்கப்பட்டதாக முறையீடுகள் வந்தன.


  இதன் தொடர்ச்சியாக நேற்று பரங்கிப்பேட்டையின் வாயிலாகக் கருதப்படும் பு.முட்லூரில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  


ஆத்திரமடைந்த பொதுமக்கள் சார்பாக, நேற்று பு.முட்லூர் ஜவுளிக்கடை பஸ் நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கட்சி  வடக்கு வட்ட செயலர் சண்முகசுந்தரம் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கடலூர் - சிதம்பரம் சாலையில் மறியிலில் ஈடுபட்டனர்.


 தகவலறிந்த மாவட்ட காவல் அதிகாரி மோகன், ஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டாட்சியரே நேரடியாக வர வேண்டும் என மக்கள்  கோரிக்கை வைத்ததால் வட்ட ஆட்சியர் காமராஜ் சம்பவ இடத்திற்கு வந்து இன்னும் இரண்டு நாட்களில் ஏற்கனவே எடுத்த கணக்கெடுப்பின்படி நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார். 


அதன்பின்  பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 10.50 முதல் மதியம் 12.10 மணி வரை போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 

0 கருத்துகள்: