இலங்கையில் போர் முடிவடைந்த பின்பு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீதான கடற்படையினரின் தாக்குதல் சம்பவம் இருக்காது என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
ஆனால் இலங்கையில் போர் முடிவடைந்தும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை விரட்டியடிப்பதும் மீன்களை பறிப்பதும் வலைகளை அறுப்பதும் என தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 10 நாட்களில் மட்டும் நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டும், கயிற்றால் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 10 நாட்களில் மட்டும் நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டும், கயிற்றால் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளன.
இது பற்றி தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் செயலாளர் சேசுராஜா,
’’இலங்கையில் போர் முடிவடைந்து அமைதியான சூழ்நிலை நிலவி வந்தும், மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீன்பிடிக்க விடாமல் விரட்டியடிப்பதும் கண் மூடித்தனமாக தாக்குவதும் வலைகளை அறுப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று தான் வருகிறது. இது குறித்து பல முறை மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிவித்தும் இதுவரையிலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மத்திய-மாநில அரசுகள் இலங்கை கடற்படைக்கு பலமுறை கண்டனம் தெரிவித்தும் அதை இலங்கை அரசோ, கடற்படையோ கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. தமிழக மீனவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத இலங்கை அரசுக்கு மத்திய அரசுகள் செய்யும் உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். வருடத்திற்கு பல கோடி அந்நிய செலாவணி ஈட்டிக்கொடுக்கும் மீனவர்கள் மீதும் மத்திய அரசு அக்கறை கொள்ளவேண்டும்.
ஆகவே மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் எந்த வித பிரச்சினையும் தாக்குதல் சம்பவங்களும் இருக்காது என்று மத்திய-மாநில அரசுகள் உறுதியளிக்க வேண்டும். இல்லையெனில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை மீனவர்கள் அனைவரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக