உலகின் பரபரப்பு மிகுந்த பெருநகரங்களுள் சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தும் குறிக்கத்தக்கது. இங்கு அமைச்சகங்கள் அமைந்துள்ள பகுதி அமைச்சகப்பகுதி (ஹைய்ய அல் வஜாராத், சுருக்கமாக ஹாரா) என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், வங்காளிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
நகரின் இதயப்பகுதியாகக் கருதப்படும் இப்பகுதியில் கடந்த திங்களன்று சிறுத்தைப் புலியொன்று தெருவில் இறங்கி உலாவரவும், பீதியடைந்த பொதுமக்கள் காவல் துறைக்குத் தொலைத் தகவல் அளிக்க, விரைந்து வந்தது காவல்துறை. அதன்பின் பொதுமக்கள், காவலர்கள் துப்பாக்கியை எடுத்தது கண்டனர்; சிறுத்தை வீழ்ந்தது கேட்டனர் என்பதாக சிறுத்தைப் புலி வீழ்த்தப்பட்ட செய்தி (படம் காண்க) அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அண்மையில் அந்த வேங்கையை அருகிலிருந்து கண்ட ஒரு வங்காளத் தொழிலாளி அளித்த தகவல்படி அவருடைய குடியிருப்புக்கு அருகில் தான் அந்தச் சிறுத்தை வளர்க்கப்பட்டு வந்ததாகவும், அந்த வீட்டில் மேலும் இரு குட்டிச்சிறுத்தைகள் அங்கே விளையாடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கிடைக்கப்பெறும் தகவல்களிலிருந்து...... சிறுத்தை வீழ்த்தப்பட்ட தகவலறிந்ததும் விரைந்து வந்த அதன் உரிமையாளர் அந்தப் 'பூனைகளின் பெரியண்ணனை' மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறாராம். இதற்கிடையில் வீட்டுவிலங்குகள் கூட வீதியில் வருவதற்குத் தடை இருக்கும் ரியாத்தில் வனவிலங்கொன்றை மனம்போனபோக்கில் செல்ல விட்ட உரிமையாளரை காவல்துறை 'வலை'வீசி தேடி வருகிறதாம்.
நன்றி;http://www.inneram.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக