இப்னு ஹம்துன் |
உணவுக்குப் பஞ்சமில்லை..
உடுப்புகளும் குறைவில்லை..
உறைவிடமோ ஒரு பிரச்னையில்லை..
முக்கால்வாசி உலகத்தாரினும்
மேலானவன் நீ - மிகையில்லை.
வங்கியில் கணக்குண்டு
வார்கச்சையிலும் இருப்புண்டு
சில்லறைச் செலவுகளுக்கோ
சஞ்சலங்கள் ஒருபோதுமில்லை!
சிறிய அந்த செல்வந்த உலகினில்
செல்லத்தக்க உறுப்பினர் தான் நீ..!
அதிகாலை விழிக்கின்றாய்
ஆரோக்யம் உணர்கின்றாய்!
ஆசிர்வதிக்கப்பட்டவனல்லவா நீ
இந்த வாரம் இல்லாமல் போன
ஒரு பத்து இலட்சம் பேரினும்!
யுத்த முகம் கண்டதில்லை
இரத்த ஓலம் கேட்டதில்லை!
பட்டினிப்பெருங்கொடுமை
பரிதவிப்பின் பெருந்துயரம்
பாதிப்புகள் உனக்கில்லை..!
பாதி உலகின் மக்களைக் காணினும்
பேறு பெற்றவன் நீ
அன்பு மிக்க பெற்றோருனக்குண்டு
பண்பு நிறை மனைவியோ - உன்
பெருமைகளின் மகுடம்!
ஆசிர்வதிக்கப்பட்டவைஉன் குழந்தைகள்
அபூர்வமானவர்களில் நீ!
'எழுதப் படிக்கத் தெரியாதவர்
இருபது கோடிப் பேராம்'
வாசிக்கும் நீ யோசிப்பதுண்டா?
எத்தனை பெருமிதம் எனக்கு" என்று!
புன்னகை வசிக்கும் உன் முகம்
இதயமும்
இறைநன்றியை உச்சரித்தே
இயங்கட்டும் என்றும்!
நன்றி வார்ப்பு
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக