ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

28 ஏப்., 2011

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், ஏப்ரல் 28, 2011 No comments


ஹக்கா சாஹிப் தர்கா தெருவில், மர்ஹூம் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனாரும், அன்சாரி அவர்களின் சம்மந்தியும் ஹஸன் அலி அவர்களின் மாமனாரும், ஹுஸைன், சதாம் ஆகியோர்களின் தகப்பனாருமான "குடைக்கார பாய்" என்கிற A.ஷர்புதீன் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

26 ஏப்., 2011

பரங்கிப்பேட்டை மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், ஏப்ரல் 26, 2011 No comments


பரங்கிப்பேட்டை: சிதம்பரம் அருகே, வெளியூர் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்க எதிர்ப்பு தெரிவித்ததால், மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 6 மினி வேன்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பதட்டத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் பிடித்து வரும் மீன்களை சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். பரங்கிப்பேட்டை விசைப்படகு சங்கத்தினர், மீன்பிடி தடைக்காலம் முழுவதும் உள்ளூர் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை மட்டும் வாங்க வேண்டும். வெளியூர் மீனவர்களின் மீன்களை வாங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
நேற்று காலை கடலூர் ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், அன்னங்கோவில் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகுகளை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கச் சென்றனர். இதை எதிர்த்து, ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த 1,000 பேர், ஆறு மினி வேன்களை அடித்து நொறுக்கி, மீன் நிறுவனங்களில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். கடலில் சென்ற மீனவர்கள், இத்தகவலைக் கேட்டதும், கரைக்கு வந்து, அன்னங்கோவில் விசைப்படகு சங்கத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கினர்.

source : mypno

வீடு தேடி வரும் மருத்துவ உதவி...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், ஏப்ரல் 26, 2011 No comments


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல் வாழ்வு சங்கம், சிங்கை நிதியுதவி மற்றும் ஆலோசனை கொண்டு பெறப்பட்ட இரத்த அழுத்த பரிசோதனை கருவி மற்றும் இரத்த சர்க்கரையளவு காணும் கருவி இவைகளை பரங்கிப்பேட்டை பொது மக்களின் மருத்துவத்திற்காக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தால் நியமிக்கப்பட்டு கடந்த மாதம் முதல் பணியிலிருக்கும் செவிலியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு அவைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று தேவையானவர்களுக்கு ஊசி போடுதல், இரத்த அழுத்தம், இரத்தப்பரிசோதனை, சர்க்கரை அளவு கண்டறிதல் போன்ற மருத்துவ சேவைகள் நமதூர் மக்களின் பெரு வரவேற்பை பெற்றுள்ள சூழ்நிலையில், இப்பணி அனைத்தும் இலவசமாகவே செய்யப்படுகின்றன. சர்க்கரை அளவு காணுவதற்கு மட்டும் 40 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இஸ்லாமிய ஐக்கிய ஜமஅhத், இம்மருத்துவ சேவைகளை சமுதாய மக்களின் நலனை கருத்தில் கொண்டு சங்க நிதி மூலம் சிறப்பாக செய்ய உதவி புரிந்த பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல் வாழ்வு சங்கம்-சிங்கை தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு பரங்கிப்பேட்டை பொதுமக்களின் சார்பில் நன்றியினையும், மனமார்ந்த பிரார்த்தனைகளை இறைவன் முன் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளது.

source : mypno

22 ஏப்., 2011

பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் மத்திமீன் அதிகரிப்பு...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, ஏப்ரல் 22, 2011 No comments


தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் லாஞ்சில் சென்று மீன் பிடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிறிய படகில் மீனவர்கள் கடலோரம் மீன்களை பிடிப்பது வழக்கம்.இந்நிலையில் வியாழக்கிழமை பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் அருகே உள்ள பகுதியில் மத்திமீன் வருகை அதிமாகி தென்பட்டதால் மீனவர்கள் படகில் சென்று பிடித்தனர். அப்பகுதி மீனவர்கள் ஒரு படகில் சுமார் 3 முதல் 4 டன் வரை மத்திமீன்களை பிடித்தனர்.

இந்த மத்திமீன் ஒரு டன் ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, இந்த மீன்கள் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. இவையல்லாமல் இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தீவனத்துக்காக இந்த மத்திமீனை வாங்கி காயவைத்து உலர்த்தி வைத்துள்ளனர். வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் காரணமாக இந்த மத்திமீன்கள் பரங்கிப்பேட்டை பகுதிக்கு படையெடுத்திருக்கலாம் என கடல்வாழ் உயிரின உயராய்வு மைய உதவிப் பேராசிரியர் டி.டி.அஜீத்குமார் தெரிவித்தாக தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
படம்: மாடல்

கிரிக்கெட் விளையாடிய போது தலையில் அடிபட்டு மாணவர் சாவு...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, ஏப்ரல் 22, 2011 No comments


பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த சங்கரின் மகன் ராம்குமார் (18). இவர் அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது கடந்த ஏப்ரல் 15-ம் தேதி கீழே விழுந்ததில் ராம்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராம்குமார் புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

18 ஏப்., 2011

VOLLEY BALL போட்டி : முதல் பரிசை வெண்றது பாண்டிச்சேரி பாரதி அணி..!

Posted by Suhail Ibnu Abu Rayyaan On திங்கள், ஏப்ரல் 18, 2011 No comments

LLபரங்கிப்பேட்டை :  வாத்தியாப்பள்ளி வாலிபால் கிளப் (V.P.V.C) , மற்றும் BIG STREET இணைந்து நடத்திய "நான்காம் ஆண்டு மாபெரும் கைப்பந்தாட்ட" (வாலிபால்) போட்டி கடந்த 16 மற்றும 17.04.2011 ஆகிய  இரு தினங்களாக பகல் இரவு ஆட்டமாக நடைப்பெற்று வந்தது.




நேற்று (17.04.2011) இரவு நடந்த பரபரப்பான இறுதி போட்டியில் பாண்டிசேரி பாரதி ஆணியும் Vs பரங்கிப்பேட்டை V.P.V.C. வாலிபால் ஆணியும் மோதி்ன...






இறுதியில்  பாண்டிசேரி பாரதி ஆணியனர் வெற்றி பெற்று கோப்பை மற்றும் முதல் பரிசு ரூ.10,000/- வென்றது. இரண்டாம் இடத்தை பிடித்த பரங்கிப்பேட்டை V.P.V.C. வாலிபால் ஆணி கோப்பை மற்றும் பரிசு தொகை ரூ.8,000/- வென்றது, மூன்றாம் இடத்தை பிடித்த திருச்சி போலீஸ் ஆணி கோப்பை மற்றும் பரிசு தொகை ரூ.7,000/- பெற்றனர்.



பரிசளிப்பு நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

source : tntj-pno

17 ஏப்., 2011

பரங்கிப்பேட்டையில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, ஏப்ரல் 17, 2011 No comments



வாத்தியாப்பள்ளி வாலிபால் கிளப் (V P V C) , மற்றும் BIG STREET இனைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கைப்பந்து (வாலிபால்) போட்டி, ஏப்ரல் 16 மற்றும் 17ல் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 30 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் நேற்று தகுதி சுற்று ஆட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டன, அதனை தொடர்ந்து இன்று கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெறும். இதில் பல மாநில முன்னனி விளயாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது தனிச்சிறப்பாகும்.































16 ஏப்., 2011

சி.முட்லூர் அரசு கல்லூரியில் துனை ரானுவம் பாதுகாப்பு...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, ஏப்ரல் 16, 2011 No comments


சிதம்பரம் : சிதம்பரம், புவனகிரி மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய மூன்று தொகுதி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை சென்னை தேர்தல் ஆணையம் மற்றும் கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலகம் நேரிடையாக கண்காணிக்க "வெப் கேமரா' பொருத்தப்பட்டது. சிதம்பரம் சி.முட்லூர் அரசு கல்லூரியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய மூன்று தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லூரி கட்டடத்தைச் சுற்றிலும் தடுப்புக் கட்டைகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காலை 6 மணி முதல் 2 மணி வரை மாலை 2 மணி முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 முதல் காலை 6 மணி வரை என சுழற்சி முறையில் போலீசார் மூன்று ஷிப்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு டி.எஸ்.பி., சுழற்சி முறையில் 24 மணி நேரம் அங்கு பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் நான்கு இன்ஸ்பெக்டர்கள், 10 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 70 போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுப்பெட்டிகள் உள்ள அறையைச் சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொகுதிக்கு ஒரு தாசில்தார் தலைமையில் அதிகாரிகள், வேட்பாளர்களின் ஏஜன்ட்டுகளும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை ஒவ்வொகு தொகுதி ஓட்டு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் முகப்பு மற்றும் நுழைவாயில் என தலா இரண்டு இடங்களில் "வெப் கேமரா' பொருத்தப்பட்டது. சென்னை தேர்தல் ஆணையம், கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து நேரடி கண்காணிப்பிற்காகவும், வீடியோ பதிவிற்காகவும் இந்த கேமிரா அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை நேற்று வேட்பாளர்கள் மா.கம்யூ., பாலகிருஷ்ணன், பா.ஜ., கண்ணன், அ.தி.மு.க., செல்வி ராமஜெயம், முருகுமாறன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் இந்துமதி, கல்யாணம், கேசவமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர்.

source: dinamalar

13 ஏப்., 2011

வாக்குபதிவில் பெண்கள் ஆர்வம்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், ஏப்ரல் 13, 2011 No comments



பரங்கிப்பேட்டை: இன்று காலை சரியாக 8 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஆண்களைவிட பெண்கள் அதிகம் ஆர்வத்துடன் தமது வாக்குபதிவினை செலுத்துகின்றனர். வெயிலையும் பொருட்படுத்தாது, நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போடுகின்றனர். பகல் 12.30 மணி நிலவரப்படி, 27 சதவீதம் வாக்குகள் பரங்கிப்பேட்டையில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
வாக்கப் பதிவினையொட்டி, பரங்கிப்பேட்டையில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் நகரின் முக்கிய வணிகப்பகுதியான சஞ்சிவீராயர் கோயில் தெரு முனை வெறிச்சோடி காணப்படுகிறது.

துவங்கியது வாக்குப் பதிவு...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், ஏப்ரல் 13, 2011 No comments


பரங்கிப்பேட்டை: சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு பலத்தப் பாதுகாப்புடன் துவங்கியது. பரங்கிப்பேட்டை அரசு மகளிர் பள்ளி, கும்மத்துபள்ளி, சலங்குகாரத்தெரு அரசினர் ஆரம்ப பள்ளி உட்பட கரிகுப்பம், சேவாமந்திர் பள்ளிகளில் அமையப்பெற்றுள்ள வாக்குச் சாவடிகளில் விறுவிறு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி, பெண்கள் அதிக ஆர்வத்துடன் அவர்களுக்கான தனி வரிசையில் நின்று வாக்கு பதிவை செலுத்தி வருகின்றனர். வாக்குச் சாவடிக்குட்பட்ட எல்லையில் கண்காணிப்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளது.

முன்னதாக நேற்றே இந்த வாக்குச்சாவடிகள் பலத்த பாதுகாப்பின் கீழ் வந்து, வாக்களிக்கும் நடைமுறைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. துவங்கியவுடன் ஒரு சில பூத்துகள் தவிர கூட்டம் சற்று குறைவாக இருந்தது. தற்போது (காலை மணி 9.15) மக்கள் கூட்டம் சற்று அதிகமாக வரத்துவங்கியுள்ளது. எல்லைக்கு வெளியே பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.

source : MYPNO

12 ஏப்., 2011

பேரூராட்சி அலுவலகம் முன் சாலை மறியல்....!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், ஏப்ரல் 12, 2011 No comments




பரங்கிப்பேட்டையில் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மின் பற்றாக்குறை காரணமாக, கடந்த 20 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கொடிமரத் தெரு, ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த பெண்கள், நேற்று காலை காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன், மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த, பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தினமும் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. திடீர் மறியலால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் செய்தி

11 ஏப்., 2011

ATM வசதி தேவை: பரங்கிப்பேட்டை தி.மு.க. கோரிக்கை...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஏப்ரல் 11, 2011 No comments


பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கியில் A.T.M., வசதி செய்து தர தி.மு.க., இளைஞரணி கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை தி.மு.க., நகர இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், சென்னை இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் பரங்கிப்பேட்டையில் இந்தியன் வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் A.T.M., வசதியில்லாததால் தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளின் A.T.M,ற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகரித்து வரும் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உடனடியாக A.T.M, வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஏப்ரல் 11, 2011 No comments


வாத்திய பள்ளி தெருவில், மர்ஹூம். ஜைனுல்லாபுதுதீன் தாதா சாஹிப் அவர்களின் மகனாரும், மர்ஹூம். ஹசனா மரைக்காயர் அவர்களின் மருமகனாரும் , K. முஹம்மது கவுஸ், M. முஹம்மது நைய்னா, O.A.W. பாவாஜான் இவர்களின் மாமனாரும் K. நாசர் உசேன் அவர்களின் தகப்பனாரும் மர்ஹூம். அப்துல் ரஹீம் சாஹிப், மர்ஹூம். அப்துல் மாலிக் சாஹிப், Z. அப்துல் அலீம் மற்றும் Z. ஹபிபுல்லாஹ் இவர்களின் சகோதரருமான   Z. கபீர் கான் சாஹிப்  அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள்.நேற்று காலை 10:00 மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது..              இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

பாலகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரிக்கும் ம.ம.க.!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஏப்ரல் 11, 2011 No comments


 பரங்கிப்பேட்டை: அ.தி.மு.க. கூட்டணியின் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் மா.கம்யூ வேட்பாளர் பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக பரங்கிப்பேட்டை நகர மனித நேய மக்கள் கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.


 மா.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பரங்கிப்பேட்டை நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவர் ஜாகிர் ஹூசைன், நகர செயலாளர் நூருல் பிலாலுதின், த.மு.மு.க. செயலாளர் ஹசன் அலி, பொருளாளர் சையது மரைக்காயர், நகர து.தலைவர் ஹாஜி நூர் அலி மற்றும் ம.ம.க. தொண்டர்களும் கூட்டணி கட்சி தொண்டர்களும் கலந்துக் கொண்டனர்.

source : MYPNO

10 ஏப்., 2011

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, ஏப்ரல் 10, 2011 No comments

வாத்திய பள்ளி தெருவில், மர்ஹூம். ஜைனுல்லாபுதுதீன் தாதா சாஹிப் அவர்களின் மகனாரும், மர்ஹூம். ஹசனா மரைக்காயர் அவர்களின் மருமகனாரும் K. முஹம்மது கவுஸ், M. முஹம்மது நைய்னா, O.A.W. பாவாஜான் இவர்களின் மாமனாரும் K. நாசர் உசேன் அவர்களின் தகப்பனாரும் மர்ஹூம். அப்துல் ரஹீம் சாஹிப், மர்ஹூம். அப்துல் மாலிக் சாஹிப், Z. அப்துல் அலீம் மற்றும் Z. ஹபிபுல்லாஹ் இவர்களின் சகோதரருமான Z. கபீர் கான் சாஹிப் அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள்.  இன்றுகாலை 10 மனியளவில் மீராப்பள்ளியில் நல்லடக்கம்செய்யப்பட்டது.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்






நன்றி;குழுமம்

அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக் கூட்டம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, ஏப்ரல் 10, 2011 No comments


புவனகிரியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது.புவனகிரி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் செல்வி ராமஜெயத்தை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. அ.தி.மு.க., தலைமைக்கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் பேசினார்.கூட்டத்தில் அ.தி.மு.க., கடலூர் மேற்கு மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன், இணைச் செயலர் செஞ்சிலட்சுமி, ஒன்றிய செயலர் சிவப்பிரகாசம், மாவட்ட மாணவரணி செயலர் உமாமகேஸ்வரன், நகர செயலர் செல்வகுமார், அவைத் தலைவர் கனகராஜ், தே.மு.தி.க., நிர்வாகிகள் ராஜா, மணிகண்டன், மா.கம்யூ., நிர்வாகிகள் ராமலிங்கம், வெற்றிவேல், இந்திய கம்யூ., நிர்வாகிகள் பூபாலன், விஸ்வலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

5 ஏப்., 2011

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், ஏப்ரல் 05, 2011 No comments

பரங்கிப்பேட்டை: இரட்டை கிணற்றுச் சந்து, மர்ஹூம் அலி முஹம்மது கவுஸ் மரைக்காயர் அவர்களின் மகளாரும், மர்ஹூம் ஜெய்னுல்லாபுதீன் தாதா சாஹிப் அவர்களின் மருமகளாரும், மர்ஹூம் அப்துல் ரஹீம் சாஹிப் அவர்களின் மனைவியும், A.M.G. நகுதா மரைக்காயர் அவர்களின் சகோதரியும், A. கலீல் அஹமது, A. லியாகத் அலி இவர்களுடைய தாயாரும், T. செய்யது உமர், A.ஜெய்னுல்லாபுதீன், M.H. கபீர் அஹமது மதனி B. தமீமுல் அன்சாரிஇ இவர்களின் மாமியாருமான கைருன்னிஸா மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிவூன்.


நன்றி : MYPNO

4 ஏப்., 2011

டுவீட்டர் பயன்படுத்தியவர் மரணம்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஏப்ரல் 04, 2011 No comments

உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணையத் தளமான டுவீட்டரை பயன்படுத்திய  இங்கிலாந்தைச் சேர்ந்த 104 வயது பெண் காலமானார்.


இதனை அந்த இணையத் தளமே செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் பிராட்போர்டு மாகாணத்தை சேர்ந்தவர் லிவிபியான் (104) இவர் டுவீட்டர் இணையதளத்தில் உறுப்பினராக சேர்ந்து ஏராளமானவர்களை நண்பர்களாக்கினார். 

இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதியுற்ற லிவிபியான் தூக்கத்தில் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. மறைந்த லிவிபியானுக்கு முன்னாள் பிரதமர் கார்டன்பிரவுன் இரங்கலை தெரிவித்துள்ளார்.


3 ஏப்., 2011

வாண்டையாருக்கு ஆதரவு திரட்டினார் காதர் மெய்தீன்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, ஏப்ரல் 03, 2011 No comments

பரங்கிப்பேட்டை: தி.மு.க. கூட்டணில் இடம் பெற்றிருக்கும் மூ.மு.க. வேட்பாளர் சிதம்பரம் வாண்டையார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கேட்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக பேராசிரியர் காதர் மெய்தீன் ஆதரவு திரட்டினார். பி.முட்லூரில் வாண்டையாருக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தபோது பரங்கிப்பேட்டையில் முஸ்லீம் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் இதில் பங்கேற்றனர்.




பி.முட்லூரில் வாண்டையாருக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தபோது பரங்கிப்பேட்டையில் முஸ்லீம் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் இதில் பங்கேற்றனர்.

நன்றி : MYPNO

1 ஏப்., 2011

பரங்கிப்பேட்டையில் பாலகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

Posted by ஹம்துன் அப்பாஸ் On வெள்ளி, ஏப்ரல் 01, 2011 No comments



அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலகிருஷ்ணன், இன்று காலை முதல் பரங்கிப்பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். திறந்த ஜீப்பில் வீதி விதியாக வலம் வந்த அவர், ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் முஸ்லிம் மக்களிடம் மீராப்பள்ளி வாயிலில் வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சிதம்பரம் மூசா, சாஹுல், வல்லரசு, அப்துல் ரஹீம்,அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் மலை.மோகன், மாரிமுத்து, ஷாஜஹான், அன்சாரி, காமில், சங்கர், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜாக்கீர், பிலால், செய்யது, ஹஸன் அலி, தே.மு.தி.க நிர்வாகிகள் அலி முஹம்மது கவுஸ், ஜின்னா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி கவுஸ் ஹமீது, மற்றும் தோழமை இயக்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர். வேட்பாளருடன், தோழமை கட்சியினர் இரு சக்கர வாகனங்களில் தங்கள் கட்சி கொடியினை ஏந்தியவாறு நகரில் வலம் வந்தனர். தேர்தலுக்கு இன்னும் 11 தினங்களே இருப்பதால் பரங்கிப்பேட்டை பகுதியில் தேர்தல் கால நிலை சூடுபிடித்துள்ளது.