ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

16 பிப்., 2009

ஓட்டு போடுறாங்கோ

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், பிப்ரவரி 16, 2009 No comments




இரு வேட்பாளர்களும் தமது ஓட்டினை பதிவுசெய்யும் காட்சி ஜமாத் தேர்தல்

15 பிப்., 2009

வெற்றி கனியை பறித்தார்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 15, 2009 No comments

வெற்றி கனியை பறித்தார் தற்போதைய தலைவர் யூனுஸ் நானாபதிவான ஓட்டுக்கள்; 1966

யூனுஸ் நானா வாங்கியவை; 1263
நூர் முஹம்மது வாங்கியவை; 686
செல்லாதவை; 17

இதுவே முதல் முறை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 15, 2009 No comments

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான "தேர்தல்" இன்று காலை சரியாக எட்டு மணியளவில் ஷாதி மஹாலில் நடைப்பெற்றது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். தனது ஜமாத்திற்கான தலைவரை தேர்ந்துயெடுப்பதற்க்காக வயதான பெரியவர்களும், உடல் ஊனமுற்ற சகோதரர்களும் தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் வாக்களிக்க வந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது
இளைஞர் சமுதாயமும் மிக ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குசாவடியில் குவிந்தனர்.
சில சலசலப்புக்கள்(கள்ள ஓட்டு பிரச்சினை) எழுந்தாலும் அவைகள் போலீஸாரால் தீர்த்துவைக்கப்பட்டன
இந்த தேர்தலுக்காக ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாக நியம்மிக்கப்பட்டனர்,அவர்களும் தமது பணியினை திறம்பட செய்தது குறிப்பிடதக்கது.
போலீஸாரும் இருபதுக்கு மேற்ப்பட்ட எண்ணிக்கையில் காவல் பணியை மேற்க்கொண்டனர்.காலையிலும் ,மாலையிலும் சிதம்பரம் காவல் இனை கண்காணிப்பாளர் திரு, நரேந்திர நாயர் மேற்பார்வையிட்டு சென்றார்.
பரங்கிப்பேட்டையை சேர்ந்த முதியவர்களிடம் இந்த தேர்தலைப்பற்றி கருத்து கேட்டோம்
அவர் தனது வாழ்நாளில் இதுப்போன்று "ஜமாத்"தலைவரை தேர்ந்துயெடுப்பதற்காக தேர்தல் எல்லாம் வைத்ததுயில்லை எனசொன்னார்.
ஊர் ஜமாத் தலைவரை தேர்ந்தெடுக்க மிகப்பெரிய அளவில் தேர்தல் வைத்து தேர்ந்தெடுத்தது தமிழ்நாட்டை பொருத்தவரை இதுவே முதல் முறையாக இருக்ககூடும்.

இந்தஜமாத் தேர்தல் அறிவித்த நேரத்தில் முதலில் M.S.முஹமது யூனுஸ் அவர்களும், அடுத்ததாக டாக்டர்.S.நூர் முஹம்மது அவர்களும், மூன்றாவதாக கா.மு. கவூஸ் அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கடைசி நேரத்தில் கா.மு.கவூஸ் அவர்கள் வாப்பஸ் வாங்கியதால் இரண்டு வேட்பாளர்கள் மட்டும் களத்தில் இருந்தனர் .

தேர்தல் களம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 15, 2009 No comments





ஜமாத் தேர்தல்

தேர்தல் களம் -2

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 15, 2009 No comments





தேர்தல் களம் -2

13 பிப்., 2009

ஓட்டு வேட்டை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 13, 2009 No comments





இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் தேர்தல் வரும் பிப்ரவரி 15ம் தேதி நடைப்பெற இருக்கின்ற
நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களும் , தாம் பதவியில் இருந்தபோது செய்த சாதனைகளையும் .தற்போது வெற்றிப்பெற்று தலைவர் பதவிக்கு வந்தால் செய்யப்போகும் பணிகளையும் பட்டியல்லிட்டு நோட்டீஸ் அடித்து வாக்காளர்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
பரங்கிப்பேட்டை முஸ்லிம் சமுதாயத்தை பொருத்தவரையில் இந்த "ஜமாத்" தேர்தல் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.வெளிநாட்டில் வசித்துவரும் பரங்கிப்பேட்டையை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களும் இந்த தேர்தலை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

12 பிப்., 2009

கவிதை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 12, 2009 No comments




துளிர்க்கின்ற எதுகண்டும் துலங்கும் உள்ளம்

களிக்கின்ற மனதுக்கே கவிதை வெள்ளம்

அளிக்கின்ற குணமிருக்கும் அதனால் 'தரு'வாம்

வளர்க்கின்ற எவருள்ளும் வாசம் மிகவாம்!

மகிழ்வின் உணர்வை மனதில் சுவையாய் நிகழ்த்தும்

இயற்கையின் நெஞ்சம்-திகழுற ஆயிரம் காவியம்

ஆங்கே தமக்குள்ளே தூயமொழி பேசும் துளிர்.



இப்இப்னு ஹம்துன் னு ஹம்துன்

நன்றி :வார்ப்பு

காய்-கனி சந்தைநிலவரம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 12, 2009 1 comment


பரங்கிப்பேட்டை மாநகரில் வியாழன் தோறும் கூடும் வாரசந்தையில் இந்த வாரம் காய்கறி மற்றும் கனி வகைகளின் விலை வீழ்ச்சியடைந்து காணப்பட்டது தங்கத்துக்கு நிகராய் விற்க்கப்பட்ட "தக்காளி" தகரத்துக்கு நிகராய் மிகவும் விலை குறைந்து விற்க்கப்பட்டது
அதுப்பற்றிய விலை விபரம்
கிலோ விலையில்.
பல்லாரி, ரூ.17
சின்ன வெங்காயம்.ரூ20
தக்காளி ரூ, 5
உருளை ,ரூ.10
கத்திரிகாய், ரூ,15
இஞ்சி, ரூ,44
பூண்டு, ரூ, 15
கோஷ், ரூ.10
அவரை ,ரூ,20
பச்சை மிளகாய், ரூ,16
வெண்டை, ரூ20
முள்ளங்கி, 4
பீட்ரூட், ரூ. 8
சவ்சவ், ரூ.10
கொத்தவரங்காய், ரூ.12
ஆப்பிள் கிலோ, ரூ 45
கமலாபழம், கிலோ, ரூ 25
திராட்ச்சை கிலோ, ரூ ௨0


8 பிப்., 2009

6 வயதுக் குழந்தையின் காதுகளைப்பிடித்து உயரத்தூக்கி...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 08, 2009 No comments



தலித் இனக் குழந்தையொன்றை பொலிஸார் தாக்கி சித்திரவதை செய்த காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதையடுத்து உத்தரபிதேச மாநிலம் முழுவதும் அச்சம்பவத்துக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா,உத்தரப் பிரதேச மாநிலம் எடாவா, ஜஸ்வந்த்பூரில் உள்ள லோகமண்டி எனும் வணிகச் சந்தையில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.தன்னிடம் வைத்திருந்த 280 ரூபா பணத்தை சந்தைக்கு வந்திருந்த தலித் இனத்தைச் சேர்ந்த கோமள் என்ற 6 வயதுக் குழந்தை திருடிவிட்டதாக ஒருவரால் பொலிஸில் புகார்செய்யப்பட்டது. இதையடுத்து மேற்படி சந்தைப்பகுதிக்கு வந்த பொலிஸார் குறித்த சிறுமியை அடித்துத் துன்புறுத்தினர்.இதன்போது ஷியாம்லால் யாதவ் என்ற உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் அச்சிறுமியின் இரண்டு காதுகளையும் பிடித்து உயரத் தூக்கியதோடு தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து உயரத்தூக்கி அச்சிறுமியை உலுக்கியது பார்ப்போரின் இதயங்களை வேதனையில் ஆழ்த்திய போதும் பொலிஸுக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை.இருந்தபோதிலும் இந்தக் கோரக் காட்சி ஒருவரால் ரகசியமாக கைத்தொலைபேசி மூலம் பதிவுசெய்யப்பட்டு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து அச்சிறுமியை சித்திரவதைக்குட்படுத்திய உதவி பொலிஸ் அதிகாரியை மாநில காவல்துறைத் தலைவர் பணிநீக்கம் செய்துள்ளார்.

நன்றி:http://www.mrishan.blogspot.com/

4 பிப்., 2009

கடையடைப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 04, 2009 No comments

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்தும்,
போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.
தமிழர் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் சில அரசியல்கட்சிகளால்
முழு அடைப்புக்கு அழைப்புவிடப்பட்டிருந்தது
இதனையடுத்து நமதூர் பரங்கிப்பேட்டையில் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன எப்போதும் பரபரபாக காட்சியளிக்கும் சஞ்சீவிராயர் கோவில் கடைத்தெரு மக்கள் நடமாற்றம் அதிகமின்றி வெறிச்சோடிகாணப்பட்டது.
அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள் வழக்கம்போல் திறந்திருந்தன
"டீ" கடைகள் அனைத்தும் அடைக்கபட்டிருந்ததால் டீ பிரியர்கள் சைக்கிளில் விற்பனையாகும் கேன் டீயை நாடிச்சென்றனர்.
பஸ் போக்குவரத்தும் அதிகமில்லை பஸ்ஸிலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

மனிதநேய மக்கள் கட்சி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 04, 2009 1 comment

அரசியலில் பங்கு பெறுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தன் ஆதரவில் மனிதநேய மக்கள் கட்சி என்கிற புதியகட்சியை பிப்ரவரி 7ம் தேதி துவக்குகிறது. இதற்கான துவக்கவிழா தாம்பரத்தில் நடக்கிறது.இதுகுறித்து தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா நிருபரிடம் கூறுகையில்,தமுமுக ஆதரவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாடு 7ம் தேதி தாம்பரத்தில் நடக்கிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்பட இருக்கிறது. துவக்க விழா மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கட்சியின் பொதுச் செயலாளராக அப்துல் சமது, பொருளாளராக ஹாரூன் ரஷீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமுமுக சமூக சேவை அமைப்பாக தொடர்ந்து செயல்படும்.இது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும். இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் செயல்படலாம்.ராமநாதபுரம், வேலூர், நெல்லை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். அவற்றில் எதாவது இரண்டு தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்றார் .

3 பிப்., 2009

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், பிப்ரவரி 03, 2009 No comments

உலகின் வயதான பெண்மணி 115 ஆவது வயதில் மரணம்
உலகிலேயே உயிர் வாழும் அதி வயதானவர் என்ற பெருமையைப் பெற்ற போர்த்துக்கல்லைச் சேர்ந்த மரியா டி ஜீஸஸ் என்ற பெண்மணி, தனது 115 ஆவது வயதில் மரணமானார். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி எட்னா பார்க்கர் இறந்த பின், உலகிலேயே உயிர் வாழும் அதி வயதானவர் என்ற பெருமையை மரியா பெற்றார்.தற்போது அமெரிக்கரான ஜெர்ட்ரூட் பெய்னெஸே உலகில் அதி வயதான நபராக திகழுகிறார். இவர் 1894 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி பிறந்தமை குறிப்பிடத்தக்கது.மத்திய போர்த்துக்கல்லில் பிறந்த மரியா டி ஜீஸஸ், தனது 12 வயதிலேயே விவசாயத் தொழிலில் பிரவேசித்ததாகவும் அவர் பாடசாலை வாசலையே மிதித்ததில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.அதனால் அவர் தனது கடைசிக் காலம் வரை எழுதப் படிக்கத் தெரியாத ஒருவராகவே வாழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி. எம்.ரிஷான் ஷெரீப் .


http://www.mrishan.blogspot.com/






2 பிப்., 2009

வெல்வது யார்?

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், பிப்ரவரி 02, 2009 No comments




பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தனது அடுத்த தலைவருக்கான தேர்தலை நோக்கிய நிலையில்,புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனுக்கள் இன்று தேர்தல் குழுவினரால் பெறப்பட்டன இதனையடுத்து தலைவர் பதவிக்காக தற்போதைய தலைவர் ஜனாப். ஹாஜி M.S. முஹம்மது யூனுஸ் அவர்களும்,


முன்னால் தலைவர் ஹாஜி Dr.S.நூர் முஹம்மது அவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மூன்றாவதாக மதியம் 3 மணி அளவில் கா.மு கவுஸ் அவரது ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வெளிநாட்டில் வசிக்கும் பரங்கிப்பேடடையை சார்ந்த முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை


கிடைக்ககூடும் என நம்பிக்கொண்டு இருந்த நிலையில், தேர்தல் குழுவினரால்


இந்திய தேர்தல் அமைப்பு சட்டத்தின் படி வெளிநாட்டு வாசிகளுக்கு இந்த ஜமாத் தேர்தலில் ஓட்டுரிமை இல்லையென சொல்லப்பட்டது இந்த ஜமாத் தேர்தலில் தங்களின் பங்களிப்பு அவசியம் இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்த

வெளிநாட்டு முஸ்லிம்களை ஏமாற்றம் அடையவைத்த இந்த தேர்தல் குழுவினரின் அறிவிப்பால்( தங்களுக்கு ஓட்டுரிமை இல்லாத நிலையில்) வெற்றிப்பெற்று புதிதாக அமையும் ஜமாத்துக்கு இவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கும் ?? என மக்கள் மனதில் கேள்விஎழும் நிலையில் வெல்வது யார்?
பொருத்திருந்து பார்போம்.
புகைப்படம்
நன்றி; கிரசண்ட் பி.என்.ஒ.














1 பிப்., 2009

போலியோ சொட்டு மருந்து

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 01, 2009 No comments


தமிழகமுழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைப்பெற்றது
கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு இடங்களில் இதற்கென மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன
பரங்கிப்பேட்டையில் கும்மத்துப்பள்ளி,ஓரியண்டல் பள்ளி மற்றும் பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணிவரை சொட்டுமருந்து போடும் பணி நடைப்பெற்றது
இந்த முகாம்களுக்கு பெற்றோர்கள் (ஓன்று முதல் ஐந்து வயது வரையுள்ள)
குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்தினை போட்டுச்சென்றார்கள்.

சொல்லாமல் சொல்லியது

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 01, 2009 No comments

சமூக ஒற்றுமைக்கு சிறப்பான உதாரணங்களுள் நமது பரங்கிப்பேட்டையும் ஒன்று. சகோதர மதத்தவர்/இனத்தவர்களுடனான வெளிப்புறத்து ஒற்றுமைகள் மட்டுமின்றி, ஒரே இன/மதத்தவர்களுள் நிலவும் உள்ஒற்றுமையும் கருத்தொருமிப்பும் யாரையும் 'மாஷா அல்லாஹ்' என்று சொல்லவைக்கும்.

கடந்த ஜனவரி 18ம்தேதி நடந்த ஊர் ஜமாத் பொதுகுழுவில் கருத்துவேறுபாடு கொண்டிருந்த ஒருசில சகோதரர்களும் இந்த ஒற்றுமை நீரோட்டத்தில் இரண்டற ஒன்றாகக் கலந்து மனம் விட்டுப் பேசியது நெகிழ்ச்சியான உணர்ச்சிப் பெருக்கை ஒவ்வொரு உள்ளத்திலும் ஏற்படுத்தியது.
இந்த ஒற்றுமையை வசப்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தபடியும், இந்நிலை இனிவரும் நாள்களிலும் தொடர்ந்திடப் பிரார்த்தித்தபடியும்.....

"ஷாதி மஹாலில் " ஊர் ஜமாத் சார்பாக மெகா விருந்து நடைப்பெற்றது இதில்பரங்கிப்பேட்டையைச் சார்ந்த அனைத்து முஸ்லிம் குடும்பங்களுக்கும் குடும்பத்தலைவரின் பெயரில் அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டது
இந்த மெகா விருந்து நிகழ்ச்சியில் பெருவாரியான ஆண்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்
இந்த விருந்து அழைப்பிதழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் ஜமாஅத்துகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் நிகழ்ச்சியில் தெரியவந்தது.
பார்ப்பதற்க்கு கண் கொள்ளாகாட்சியாக இருந்த இந்த சந்தோஷ விழா அழைப்பிதழில் போட்டிருந்தபடி சரியாக 11மணியளவில் ஆரம்பமாகியது
உற்றார்-உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் உற்சாகமாய் கலந்துக்கொண்டு களப்பணியாற்றியது , நம்மை யாரும் இனி பிரிக்கமுடியாது என்பதைச் சொல்லாமல் சொல்லியது

விருந்து நடைபெற்ற நேரத்தில் எங்கே தால்ச்சா, எங்கே மறுசோறு, அங்கே ஒரு சஹன் வையுங்க போன்ற சந்தோஷ குரல்கள் ஷாதிமஹால் எங்கும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது
இந்த விழாவில் மத நல்லிணக்கத்தை பேணும் விதமாக மாற்று மத சகோதரர்களும் கலந்துகொண்டார்கள் .

தகவல்;
ஹம்துன் அஷ்ரப்