ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

18 டிச., 2010

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, டிசம்பர் 18, 2010 No comments

காஜியார் சந்தில் மர்ஹும் ஜே.உதுமான் அலி அவர்களின் மகளாரும், இசட்.முஹம்மது நெய்னா அவர்களின் மனைவியும், எம். அன்வர் அலி, மர்ஹும் கவுஸ் மியான் இவர்களின் தாயாரும், என். ஜவஹர் அலி, முஹம்மது பாருக், முஹம்மது நாசர், முஹம்மது கஜ்ஜாலி இவர்களின் பாட்டியாருமாகிய முஹம்மதா பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் மீராப்பளியில்.
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்.

புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, டிசம்பர் 18, 2010 No comments


மச்சி வாட ஒரு தம் போட்டுட்டு வரலாம் இன்று நிறைய இடங்களில் நண்பர்களிடம் ஒலிக்கும் வார்த்தைகளில் ஒன்று. புகை நமக்கு பகை, புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ன சொன்னாலும், எப்படி விளம்பரப்படுத்தினாலும் இன்று புகை பிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. புகைப்பழக்கம் ஒழிக்க முடியாத ஒன்று புகை பிடிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் உடலுக்கு தீங்கான விசயம் என்று. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் புகைபிடிப்பவர்கள் பார்த்து புகைப்பதை விட்டால் தான் புகையை ஒழிக்க முடியும்.

முக்கியமாக இளைய சமுதாயம் நிறைய புகைப்பழக்கத்தை ஆரம்பிக்கின்றனர் இதற்கு காரணம் அவர்களின் வருவாய். படிக்கும் போது அவ்வப்போது திருட்டு தம் அடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள் அதே வேலைக்கு செல்லும் போது தைரியமாக அடிப்பார்கள் கேட்டர்ல் சம்பாரிக்கறமல்ல இது தான் பதிலாக இருக்கும்.

புகைக்க ஆரம்பிக்க சில காரணம்

1. நண்பர்கள் அவன் பிடிக்கிறதை பார்த்து நாமும் குடித்தால் என்பதால்

2.சினிமாவில் நடிகர்கள் புகைபிடிப்பதை ஒரு ஸ்டைலாகவும், அதை வீரமாகவும் காட்டுவதால் இவர்களும் ஆரம்பித்து விடுகின்றனர்.
3.வீட்டில் அப்பா குடிப்பதை தினமும் பார்க்கும் போது நாமும் குடிச்சா என்ன

4.சக நண்பர்களிடம் நானும் குடிப்பேன் என பெருமை பீத்துவதற்காக
5.வேலைல டென்சனா இருக்குது அதனால குடிச்சேன் என்பது

6.தம் அடிச்சாதான் சுறுசுறுப்பா இருக்கமுடியும் என்ற நினைப்பு
இப்படி பல தேவையில்லாத காரணங்களுக்காகத்தான் புகை பிடிக்கன்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சப்பை கட்டுவது. புகை பிடித்தால் எனக்கு அது நடந்தது இது நடந்தது என யாரும் சொல்ல முடியாது.

புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்...
கடந்த வருடம் என் நண்பன் இறந்த புகை பழக்கத்தால் கேன்சர் வந்து இறந்தார் அவரைப்பற்றிய எங்கள் நண்பர்களுடன் பேசியதால் அவர் நினைவாக இப்பதிவு...

17 டிச., 2010

கிராம நிர்வாக அதிகாரி தேர்வு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 17, 2010 No comments


கிராம நிர்வாக அதிகாரி தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆ‌ம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் வருவாய் துறையில் 2,653 கிராம நிர்வாக அதிகாரி (VAO) பணி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. 10ஆம் வகுப்பை கல்வித்தகுதியாக கொண்ட கிராம நிர்வாக அதிகாரிக‌ள் தேர்வுக்கு பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் உள்பட சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளன‌ர்.
பொதுவாக, டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் தேர்வு தேதியையும் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு கிராம நிர்வாக அதிகாரிக‌ள் தேர்வுக்கான அறிவிப்பில் தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் தேர்வு தேதி பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எப்போது நடத்தப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.




இந்நிலையில், கிராம நிர்வாக அதிகாரிக‌ள் தேர்வுக்கான தேதியை டி.என்.பி.எஸ்.சி. நேற்று அறிவித்தது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆ‌ம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், புதிதாக 831 காலி இடங்களும் சேர்க்கப்பட்டு மொத்த பணி இடங்களின் எண்ணிக்கை 3,484 ஆக உயர்ந்தது.

கிராம நிர்வாக அதிகாரிக‌ள் தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பணி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காலி இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் புதியவர்கள் விண்ணப்பித்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, கிராம நிர்வாக அதிகாரிக‌ள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரு‌ம் 28ஆ‌ம் தேதி மாலை 5.45 மணி ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் 26ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

16 டிச., 2010

கலில் அஹ்மத் கீரனூரி ஹஜ்ரத்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், டிசம்பர் 16, 2010 No comments

திண்டுக்கல் யூசுபியா மதரசாவின் முதல்வரும்,முதுபெரும் மார்க்க அறிஞரும் சிறந்த பேச்சாளருமான கலீல் அஹ்மத் கீரனூரி ஹஜ்ரத் அவர்கள் இன்று மாலை மர்ஹுமாகிவிட்டார்கள் 
இன்ஷா அல்லா நாளை காலை நல்லடக்கம் கீரனூரில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

திருமாவளவன் கோரிக்கை

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், டிசம்பர் 16, 2010 No comments

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் மத்திய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரே ஆண்டில் பெட்ரோல் விலை எட்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்டதில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.12 உயர்ந்துள்ளது. இந்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஒப்புதலோடு இவ்வாறு விலை உயர்த்தப்படுவதாக பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த காலங்களில் இந்திய அரசே பெட்ரோல் விலை வரையறைகளைத் தீர்மானித்து வந்தது. ஆனால், அண்மைக்காலமாக, அந்த அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அளித்து விட்டதனால், அந்நிறுவனங்களே விலை உயர்வைத் தீர்மானித்து, அறிவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்புக்கு பெட்ரோலிய அமைச்சகத்தின் அனுமதி பெற்று அறிவிக்கும் ஒரு ஏற்பாட்டை வைத்துள்ளனர்.

விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கும் இந்திய அரசின் இத்தகைய கொள்கை முடிவு வெகுமக்களுக்கு எதிரான முடிவேயாகும்.

இந்திய அரசின் இந்த முடிவால், ஏழை- எளிய உழைக்கும் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை மேலும் அதிகரித்துள்ளது. எனவே, அரசு இம்முடிவை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் விலையை எட்டாவது முறையாக தற்போது உயர்த்தியுள்ள முடிவையும் உடனே திரும்பப் பெற இந்திய அரசு ஆணையிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஓர் அரசால் மட்டுமே குடிமக்களைப் பொருளாதாரச் சுமைகளிலிருந்தும் வறுமைக் கொடுமைகளிலிருந்தும் ஓரளவேனும் பாதுகாத்திட இயலும்.

எனவே, பெட்ரோல் டீசல் விலையைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் இந்திய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதுடன், அவற்றின் விலைகளையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கையில் கூறியுள்ளார்.
நன்றி:இந்நேரம்.காம்

கரூர் பள்ளபட்டியில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலைமறியல்

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், டிசம்பர் 16, 2010 No comments

கரூர் பள்ளபட்டியில் நேற்று சாலை மறியல் நடந்தது

பள்ளபட்டியில் நேற்று தவறான தொழிலுக்கு உதவியதாக 3 பெண்கள் உட்பட இருவரை மக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர் .
மேலும் , அவர்களின் அலுவலங்கள் தகர்க்கப்பட்டது .

இதன் பின்பு இன்று அதிகாலை 10 நபர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர் .

தகவலறிந்த மக்கள் கொதித்தெழுந்து இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் இவ்விவகாரத்தை அரசியலாக்க முயற்சிப்பதாகவும் ,நாங்கள் தவறு செய்தவர்களை பிடித்துத் தந்தால் எங்களின்மீதே
நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றும், இந்து அமைப்பை சார்ந்த ஒருவருக்காக இவ்வாறு செய்வதாக ஆர்ப் பாட்டத்தில் ஈடு பட்டவர்கள் தெரிவித்தனர்.
பின்பு dsp ,adsp உட்பட போலீசார் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் .கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டால்தான்
கலைந்து செல்வோம் என உறுதியுடன் மக்கள் தெரிவித்தனர் .

பின்பு sp சம்பவ இடத்திற்கு வந்தார் அனைவரையும் விட்டுவிடுவதாக வாக்குறுதி அளித்தார். அதன்பின்பு மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர் .
கைது செய்யப்பட்டவர்களில் 8 நபர்களை மட்டும் வெளிவிட்ட போலீசார் 2 பேரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
இச்சம்பவத்தால் பள்ளபட்டி யில் பரபரப்பு காணப்படுகிறது .

நன்றி:http://www.pallivaasal.com

15 டிச., 2010

விரட்டி தாக்கியது மயில்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், டிசம்பர் 15, 2010 No comments


நாகர்கோவில் அருகே பொது மக்களை அச்சுறுத்தி வந்த ஆண் மயிலை வனத்துறையினர் நேற்று பிடித்தனர். நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி சம்மங்கரை காலனி பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காலில் காயத்துடன் ஆண் மயில் மயங்கிய நிலையில் கிடந்தது.

அந்த மயிலுக்கு 3 வயது இருக்கும்
அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், காலில் மருந்து வைத்து கட்டி காயத்தை ஆற்றினார். அதன் பின்னர் அவரது வீட்டு அருகே சுற்றித் திரிந்த மயில், கடந்த 1 மாதமாக அந்த வழியாக சென்றவர்களை விரட்டி, விரட்டி தாக்க ஆரம்பித்தது. பெரியவர்கள், சிறியவர்கள் வரை ஒருவரையும் விடாமல் துரத்தி, துரத்தி கொத்தியதால் மயிலை கண்டு மக்கள் மிரண்டு ஓடத் தொடங்கினர்.

நேற்று முன்தினம் 2 சிறுவர்களை தாக்கி காயப்படுத்தியது. இதையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன ஊழியர்கள் சென்று நேற்று மயிலை பொறி வைத்து பிடித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

மயிலை உதயகிரி கோட்டையில் விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘ஆண் மயில்கள் பெரும்பாலும் பெண் மயில்களின் துணையை தேட தொடங்கும். இந்த மயில் கடந்த 6 மாதத்துக்கு மேலாக தனிமையில் இருந்ததால், இது போன்ற தாக்குதலை நடத்தி இருக்கிறது’’ என்றனர்.

ஆசிரியர் நியமனம்: திருமா-விடம் இ.த.ஜ கோரிக்கை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், டிசம்பர் 15, 2010 No comments

பரங்கிப்பேட்டை கும்மத்துப்பள்ளி தெரு நடுநிலைப்பள்ளியில் சில பாடபிரிவுகளுக்கு எந்த ஆசிரியரும் இல்லை என்பதற்கும் ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் நீண்ட விடுப்பில் சென்று இதுவரை பணிக்கு திரும்பாததற்கும் உடனே நடவடிக்கை எடுக்க கோரி பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிதம்பரம் பாரளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இக்கோரிக்கையை பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி நசுருத்தீன் பாரளுமன்ற உறுப்பினரிடம் வழங்கினார்.


நன்றி: mypno.com

14 டிச., 2010

ஜமாஅத் அலுவலகம் திறப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், டிசம்பர் 14, 2010 No comments

கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலக திறப்பு விழா நேற்று முன்தினம் கடலூர் செம்மண்டலத்தில் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், மாவட்ட செயலாளர் கமாலுதீன், மற்றும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: P.I.Jகுழுமம்

13 டிச., 2010

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், டிசம்பர் 13, 2010 No comments

பற்களையும் ஈறுகளையும் சுத்தமாக வைத்திருந்தால் இருதயக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.



தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும்.


இதுதொடர்பான ஆய்வுகளில் இத்தாலி நாட்டின் மிலன் பல் கலைக்கழக நோய் எதிர்ப்பு இயல் துறை தலைவர் டாக்டர் மரியோ கிளரிக் தலைமையிலான குழு ஈடுபட்டது. 


இதில் வெளியான தகவல்கள் வருமாறு:

மனிதனின் வாய்ப்பகுதியில் ஏராளமான பேக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்கள் உள்ளன. இதில் நன்மை தரும் நுண்ணுயிர்களும் உண்டு, தீமை தரும் நுண்ணுயிரிகளும் இருக்கின்றன.


இவற்றில் தீமை தரும் நுண்ணுயிரிகள் வாய்ப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி இருதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரியவந்தது. 

இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது பார்பிரோமோனஸ் ஜிங்வலிஸ் (Porphyromonas Gingivalis) நுண்ணுயிரி ஆகும்.

தினமும் சுத்தமாக பல்துலக்குவதன் மூலமும், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலமும் இந்த நுண்ணுயிரி அழிக்கப்பட்டு விடுகிறது.

இது வாய்ப்பகுதியில் அதிகமாக இருந்தால்,அது ரத்தத்தில் கலந்து இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

அதாவது ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படுத்துவதை இந்த நுண்ணுயிரி தடுக்கவில்லை. 

பல்வேறு வயது பிரிவு மற்றும் ஆரோக்கியமானவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் போன்றவர்களைக் கொண்டு இந்த மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

தற்போது இந்த ஆய்வு ஆரம்ப நிலையில் இருக்கிறது என்றும் தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகளின் மூலம் பல புதிய தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.

நன்றி;http://ilayangudikural.blogspot.com

போக்குவரத்து நெருக்கடி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், டிசம்பர் 13, 2010 No comments



திருக்குர்ஆன் வகுப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், டிசம்பர் 13, 2010 No comments



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருக்குர்ஆன் வகுப்பு நேற்று TNTJ மர்கஸில் தொடங்கப்பட்டது. இறைவன் நாடினால் வாரந்தோரும் ஞாயிற்றுகிழமை அன்று நடைப்பெற இருக்கும் இவ்வகுப்பு மூலம் தஜ்வீத் அடிப்படையில் குர்ஆன் ஓதுதல், துஆக்கள் மனனம் செய்யும் பயிற்சி ஆகியவை பயிற்றுவிக்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை TNTJ நிர்வாகிகள் முத்துராஜா, பாஜுல் ஹுஸைன், துபாய் இஸ்மாயில். சேக் தாவூத் ஆகியோர் செய்துள்ளனர்.

படம்: TNTJ

TNTJ சார்பில் பெண்களுக்கான பயான்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், டிசம்பர் 13, 2010 No comments

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெண்கள் பயான் நேற்றிரவு காஜியார் தெருவில் நடைப்பெற்றது. கூட்டத்தில் TNTJ  மாவட்ட பேச்சாளர் ஷாபி மன்பஈ "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்

படம்: TNTJ

12 டிச., 2010

கரன்சி கொட்டிய அதிசய ஏடிஎம் கார்டு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, டிசம்பர் 12, 2010 No comments


கோவையில் ஒரு கடையில் வேலை செய்து வந்த புஷ்பராஜ், 2007ம் ஆண்டு, அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு வங்கியில்,5 ஆயிரம் செலுத்தி கணக்கு தொடங்கினார். ஏடிஎம் கார்டையும் பெற்றார். ஏடிஎம் கார்டு மூலம் எந்த வங்கியிலும் பணம் எடுக்கலாம். ஒருநாள் ஏடிஎம்மில் 1000 எடுத்தார். பின்னர் ஊட்டியிலும், கோவையிலும் மற்றொரு வங்கியின் ஏடிஎம் மூலம் தலா 1000 எடுத்தார்.

பேலன்ஸ் ரசீதில், அவரது கணக்கில் மீதம் 5 ஆயிரம் இருப்பதாக காட்டியது. பணம் எடுத்த பிறகும், தனது கணக்கில் பணம் குறையாததை கண்ட புஷ்பராஜ் ஆச்சர்யம் அடைந்தார். ‘ரகசியத்தை‘ யாரிடமும் சொல்லவில்லை. 10 ஆயிரம், 20 ஆயிரம் என எடுக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவரது கணக்கில் 60 ரூபாய் பேலன்ஸ் இருப்பதாக காட்டியது. ஆனாலும் ஏடிஎம் கார்டை செருகினால் அமுதசுரபியாய் பணம் கொட்டியது. 2007 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் மொத்தம்27 லட்சத்தை ஏடிஎம் மூலம் கறந்தார் புஷ்பராஜ்.

ஒரே வங்கியில் இல்லாமல் பல வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்துள்ளதால், முறைகேடாக பணம் பெறுவது முதலில் வங்கிகளுக்கு தெரியவில்லை. லட்சக்கணக்கில் பணம் குறைந்ததால் வங்கி அதிகாரிகள் உஷாராயினர். கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் புஷ்பராஜ் வசித்த துடியலூர் முகவரிக்கு சென்றனர். அவர் தலைமறைவாகிவிட்டார். புஷ்பராஜின் முகம் ஏடிஎம் கேமராவில் பதிவாகி இருந்தது.

கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.  போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. புஷ்பராஜின் டிரைவிங் லைசென்ஸ் கிடைத்தது. அது நாகர்கோவில் முகவரியில் இருந்தது. அங்கு சென்று விசாரித்தனர்.  அங்கேயே முகாமிட்டு திருச்செந்தூர் அருகே ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்த புஷ்பராஜை பிடித்து கோவை கொண்டுவந்தனர். அவரிடமிருந்து 20 பவுன் நகையை கைப்பற்றினர்.

விசாரணையில், தமிழ்நாட்டில் எந்த ஊருக்கு சென்றாலும் ஏடிஎம்மில் தினமும் ஆயிரக்கணக்கில் பணம் எடுத்து ஆடம்பரமாக செலவு செய்தது, சென்னைக்கும் மும்பைக்கும்  விமானத்தில் பறந்தது, ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தது ஆகியவற்றை புஷ்பராஜ் தெரிவித்தார். 3 ஆண்டுகளாக பிடிபடாததால் இனி பயமில்லை என நினைத்தேன். ஆனால் போலீசார் பிடித்துவிட்டனர் என்றார்.

source : www.tamilcnn.com

11 டிச., 2010

பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்க (கிழக்கு மாகாண ) கூட்டம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, டிசம்பர் 11, 2010 No comments

பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்க (கிழக்கு மாகாண ) கூட்டம் தம்மாம் நகரில் மூத்த நிர்வாகி கவுஸ் மாலிமார் இருப்பிடத்தில் நேற்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வஜ்ஹுதின் தலைமை தாங்கினார். உப தலைவர் கலீமுல்லாஹ் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் அமைப்பின் செயல்பாடுகள், மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

படம் : நௌஷாத் அலி