கரூர் பள்ளபட்டியில் நேற்று சாலை மறியல் நடந்தது இதன் பின்பு இன்று அதிகாலை 10 நபர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர் . தகவலறிந்த மக்கள் கொதித்தெழுந்து இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
16 டிச., 2010
கரூர் பள்ளபட்டியில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலைமறியல்
பள்ளபட்டியில் நேற்று தவறான தொழிலுக்கு உதவியதாக 3 பெண்கள் உட்பட இருவரை மக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர் .
மேலும் , அவர்களின் அலுவலங்கள் தகர்க்கப்பட்டது .
போலீஸார் இவ்விவகாரத்தை அரசியலாக்க முயற்சிப்பதாகவும் ,நாங்கள் தவறு செய்தவர்களை பிடித்துத் தந்தால் எங்களின்மீதே
நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றும், இந்து அமைப்பை சார்ந்த ஒருவருக்காக இவ்வாறு செய்வதாக ஆர்ப் பாட்டத்தில் ஈடு பட்டவர்கள் தெரிவித்தனர்.
பின்பு dsp ,adsp உட்பட போலீசார் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் .கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டால்தான்
கலைந்து செல்வோம் என உறுதியுடன் மக்கள் தெரிவித்தனர் .
பின்பு sp சம்பவ இடத்திற்கு வந்தார் அனைவரையும் விட்டுவிடுவதாக வாக்குறுதி அளித்தார். அதன்பின்பு மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர் .
கைது செய்யப்பட்டவர்களில் 8 நபர்களை மட்டும் வெளிவிட்ட போலீசார் 2 பேரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
இச்சம்பவத்தால் பள்ளபட்டி யில் பரபரப்பு காணப்படுகிறது .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக