ஹம்துன் அஷ்ரப்

17 டிச., 2010

கிராம நிர்வாக அதிகாரி தேர்வு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 17, 2010 No comments


கிராம நிர்வாக அதிகாரி தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆ‌ம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் வருவாய் துறையில் 2,653 கிராம நிர்வாக அதிகாரி (VAO) பணி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. 10ஆம் வகுப்பை கல்வித்தகுதியாக கொண்ட கிராம நிர்வாக அதிகாரிக‌ள் தேர்வுக்கு பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் உள்பட சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளன‌ர்.
பொதுவாக, டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் தேர்வு தேதியையும் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு கிராம நிர்வாக அதிகாரிக‌ள் தேர்வுக்கான அறிவிப்பில் தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் தேர்வு தேதி பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எப்போது நடத்தப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.




இந்நிலையில், கிராம நிர்வாக அதிகாரிக‌ள் தேர்வுக்கான தேதியை டி.என்.பி.எஸ்.சி. நேற்று அறிவித்தது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆ‌ம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், புதிதாக 831 காலி இடங்களும் சேர்க்கப்பட்டு மொத்த பணி இடங்களின் எண்ணிக்கை 3,484 ஆக உயர்ந்தது.

கிராம நிர்வாக அதிகாரிக‌ள் தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பணி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காலி இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் புதியவர்கள் விண்ணப்பித்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, கிராம நிர்வாக அதிகாரிக‌ள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரு‌ம் 28ஆ‌ம் தேதி மாலை 5.45 மணி ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் 26ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

0 கருத்துகள்: