நாகர்கோவில் அருகே பொது மக்களை அச்சுறுத்தி வந்த ஆண் மயிலை வனத்துறையினர் நேற்று பிடித்தனர். நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி சம்மங்கரை காலனி பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காலில் காயத்துடன் ஆண் மயில் மயங்கிய நிலையில் கிடந்தது.
அந்த மயிலுக்கு 3 வயது இருக்கும்
அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், காலில் மருந்து வைத்து கட்டி காயத்தை ஆற்றினார். அதன் பின்னர் அவரது வீட்டு அருகே சுற்றித் திரிந்த மயில், கடந்த 1 மாதமாக அந்த வழியாக சென்றவர்களை விரட்டி, விரட்டி தாக்க ஆரம்பித்தது. பெரியவர்கள், சிறியவர்கள் வரை ஒருவரையும் விடாமல் துரத்தி, துரத்தி கொத்தியதால் மயிலை கண்டு மக்கள் மிரண்டு ஓடத் தொடங்கினர்.
நேற்று முன்தினம் 2 சிறுவர்களை தாக்கி காயப்படுத்தியது. இதையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன ஊழியர்கள் சென்று நேற்று மயிலை பொறி வைத்து பிடித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
மயிலை உதயகிரி கோட்டையில் விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘ஆண் மயில்கள் பெரும்பாலும் பெண் மயில்களின் துணையை தேட தொடங்கும். இந்த மயில் கடந்த 6 மாதத்துக்கு மேலாக தனிமையில் இருந்ததால், இது போன்ற தாக்குதலை நடத்தி இருக்கிறது’’ என்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக