ஹம்துன் அஷ்ரப்

19 டிச., 2010

எளிமையான ஆனால் சிறப்புமிக்க விழா...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, டிசம்பர் 19, 2010 No comments







அது ஒரு எளிமையான விழா, ஆனால் சிறப்புமிக்க விழாவாக அமைந்திருந்தது எனலாம், அது நேற்று மாலை ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு மினி மஹாலில் சிங்கை தொழிலதிபர், சமூக சேவகர் S.M. ஜலீல் அவர்களுக்கு பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத் சார்பாக நடைப்பெற்ற பாராட்டு விழா.

ஜமாஅத் - பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், மீராப்பள்ளி இமாம் முஜீபுர் ரஹ்மான் உமரி கிராஅத் ஓதி கூட்டத்தினை துவக்கி வைத்தார்.

தலைமையுரையாற்றிய ஜமாஅத் தலைவர்  M.S.முஹம்மது யூனுஸ், பரங்கிப்பேட்டைக்கு மட்டுமின்றி அருகிலுள்ள பல்வேறு ஊர்களிலுள்ள முஸ்லிம் சமுதாய மக்களின் வாழ்வியல் முன்னேற்றம், உயர்கல்விக்காக சகோதரர் S.M.ஜலீல் ஆற்றிவரும் பணிகளை பட்டியலிட்டார், மேலும் உயர்கல்விக்காக தொழிலதிபர் H.M.ஹனிபா ஆற்றிவரும் பணிகளுக்காகவும் ஊர் மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்தார்.

பரங்கிப்பேட்டையிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகங்கள், பல்வேறு அமைப்புகள், சார்பாக பொன்னாடை அணிவித்து தங்களின் அன்பினை வெளிப்படுத்தினர்.

இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய S.M.ஜலீல் தனது உரையில், இளைஞர்கள் - பெரியோர்கள் குர்ஆன் ஓதுவதற்கு வசதியாக மக்தப்கள் ஏற்படுத்தவேண்டுமென்றும், தனது நீண்ட நாள் விருப்பமான பரங்கிப்பேட்டை நகரில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும், அதற்கான உதவிகளை செய்யவும் தான் தயாராக இருப்பதாகவும் இக்கூட்டத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கூறியது, கூட்டத்திற்கு வந்திருந்தோரை நெகிழ வைத்தது. இதுப்போன்ற நல்ல உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள் நம்மிடையே பல்கி பெருக வேண்டும். அதுவே சமூக முன்னேற்றத்திற்கான வலுவான கட்டமைப்பினை உருவாக்கி தரும்.

கூட்டத்தில் தொழிலதிபர் H.M.ஹனிபா, பரங்கிப்பேட்டையிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள், பைத்துல்மால், கிரஸண்ட நல்வாழ்வு சங்கம், இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையம், முஸ்லீம் லீக், தமுமுக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகளும், பொதுமக்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: