-
PORTONOVO MASJID
This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]
-
MARINE BIOLOGY
This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]
-
PORTONOVO LIGHT HOUSE
This is the PORTONOVO LIGHT HOUSE. [...]
- #
#
29 ஜன., 2011
புவனகிரி A.T.M. மையத்தில் பணம் திருட்டு
புவனகிரியில், A.T.M. மையத்தில் கேமராவை செயலிழக்க செய்து, பணம் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் புவனகிரி சின்ன தேவாங்கர் தெருவில், லட்சுமி விலாஸ் பாங்க் A.T.M. மையம், கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இங்கு இரவு நேர காவலர்கள் இல்லாததால், திறந்த சில நாட்களிலேயே மையத்தின் முன்பக்க கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
நேற்று இரவு ஆதிவராகநத்தத்தை சேர்ந்த வினோத் என்பவர் A.T.M. மையத்தில் பணம் எடுத்த போது, அவரது கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளது தெரியவந்தது.வினோத் கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில் வினோத் பணம் எடுப்பதற்கு சற்று நேரம் முன் அடையாளம் தெரியாத தொப்பி அணிந்த மர்ம நபர் ஒருவர், கேமராவை செயலிழக்க செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
28 ஜன., 2011
இறப்புச் செய்தி
கவுஸ் பள்ளி தெருவில், மலேஷியா டிராவல்ஸ் நிறுவனரும், அப்துஸ் ஸலாம், அப்துல் குத்தூஸ், அப்துல் லத்தீப், அப்துஸ் ஸமத், அப்துல் அஹத், அப்துல் மாலிக் இவர்களின் தகப்பனாருமாகிய M.A.ரவூப் சாஹிப் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
பூமி அதிர்ச்சி..?
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது வேப்பநத்தம் கிராமம். இங்குள்ள பொன்னொளி நகரில் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். நேற்று அதிகாலை இந்த கிராம மக்கள் வழக்கம்போல எழுந்து தங்கள் காலைப்பணிகளை தொடங்கினார்கள்.
காலை 6.15 மணிக்கு அங்கு திடீரென சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட சில நொடிகளில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக பீதி நிலவியது. வீட்டிற்குள் இருந்த நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வெளியே ஓடிச்சென்று மிரட்சியுடன் காணப்பட்டன.
இந்த அதிர்வை உணர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி வீதிக்கு ஓடி வந்தார்கள்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் சிலர், தங்கள் உடலில் அந்த பூமி அதிர்வை உணர்ந்ததாகவும், 10 நொடிகளுக்கு பிறகே இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தெரிவித்தனர். மேலும் சிலர் நடந்த சம்பவத்தில் இருந்து மீளமுடியாமல் திகைத்து நின்றனர். இதேபோல அருகில் உள்ள ஊனத்தூர், சிறுவாச்சூர், அண்ணாநகர், கல்லாநத்தம், அன்புநகர் ஆகிய கிராமங்களிலும் பூமி அதிர்ச்சியை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார் உத்தரவின்பேரில் அதிகாரிகள் சேலம் வானிலை ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதா? என்று விசாரணை நடத்தினார்கள்.
விழுப்புரம், சேலம் மாவட்டத்தின் எல்லையாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 800 அடி உயர்ந்துள்ள இம்மலையில் விழுப்புரம் மாவட்ட பகுதியில் 171 பெரிய, சிறிய மலை கிராமங்கள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று காலை 6.20 மணியளவில் 25 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இடி முழங்கிய சத்தத்துடன் திடீரென்று நில அதிர்வு ஏற்பட்டது. ஒரு சில வினாடிகள் நீடித்த இந்த அதிர்வால் வீடுகள் லேசாக குலுங்கின. வீட்டின் மேற்கூரை, அலமாரியில் வைத்திருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன. சில வீடுகளில் சமையல் பாத்திரங்கள் கீழே விழுந்து சத்தம் உண்டானது.
நில அதிர்வை உணர்ந்த மலைவாழ் மக்கள், குழந்தைகளையும், உடமைகளையும் தூக்கிக்கொண்டு அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறினர். இதற்குள் நில நடுக்கம் பீதி கிராமங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீதி அடங்கிய பிறகே கிராம மக்கள் வீட்டுக்குள் சென்றனர்.
நில அதிர்வால் சுண்டகப்பாடியில் ஒரு கூரை வீட்டின் சுவரிலும், கொடுந்துறை கிராமத்தில் உள்ள நூலக கட்டிடத்தின் சுவரிலும் லேசான விரிசல் ஏற்பட்டது. மற்றபடி பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் இல்லை.
இதுகுறித்து சேலம் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
தென் கிழக்கு ஈரான் நாட்டில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் பகல் 2 மணி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. அந்த பதிவுதான் இங்குள்ள சீஸ்மோகிராப் கருவியில் பதிவாகி உள்ளது. மற்றபடி சேலம் மாவட்டத்திலோ, சேலத்திலோ நில நடுக்கம் ஏற்பட்டதாக கருவியில் பதிவாகவில்லை.
27 ஜன., 2011
26 ஜன., 2011
பரங்கிப்பேட்டையில் 62-வது குடியரசுதின விழா
பரங்கிப்பேட்டையில் 62-வது குடியரசுதின விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் முஹம்மது யூனுஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் புகழேந்தி கொடியேற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அரசு மருத்துவமனை, மின்சார வாரியம், சுங்க அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசிய கொடியேற்றப்பட்டது.
கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பி.எம். இஸ்ஹாக் மரைக்காயர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நகர இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற குடியரசுதின விழாவில் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செய்யது அலி கொடியேற்றி வைத்ததார்.
நன்றி;
mypno.blogspot.com
சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போம் ; மீனவர் சங்கங்கள் அறிவிப்பு
இலங்கையில் போர் முடிவடைந்த பின்பு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீதான கடற்படையினரின் தாக்குதல் சம்பவம் இருக்காது என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
ஆனால் இலங்கையில் போர் முடிவடைந்தும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை விரட்டியடிப்பதும் மீன்களை பறிப்பதும் வலைகளை அறுப்பதும் என தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 10 நாட்களில் மட்டும் நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டும், கயிற்றால் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 10 நாட்களில் மட்டும் நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டும், கயிற்றால் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளன.
இது பற்றி தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் செயலாளர் சேசுராஜா,
’’இலங்கையில் போர் முடிவடைந்து அமைதியான சூழ்நிலை நிலவி வந்தும், மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீன்பிடிக்க விடாமல் விரட்டியடிப்பதும் கண் மூடித்தனமாக தாக்குவதும் வலைகளை அறுப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று தான் வருகிறது. இது குறித்து பல முறை மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிவித்தும் இதுவரையிலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மத்திய-மாநில அரசுகள் இலங்கை கடற்படைக்கு பலமுறை கண்டனம் தெரிவித்தும் அதை இலங்கை அரசோ, கடற்படையோ கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. தமிழக மீனவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத இலங்கை அரசுக்கு மத்திய அரசுகள் செய்யும் உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். வருடத்திற்கு பல கோடி அந்நிய செலாவணி ஈட்டிக்கொடுக்கும் மீனவர்கள் மீதும் மத்திய அரசு அக்கறை கொள்ளவேண்டும்.
ஆகவே மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் எந்த வித பிரச்சினையும் தாக்குதல் சம்பவங்களும் இருக்காது என்று மத்திய-மாநில அரசுகள் உறுதியளிக்க வேண்டும். இல்லையெனில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை மீனவர்கள் அனைவரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.
24 ஜன., 2011
ஊழல்..
கடமைகளைக்
கருவறுக்க;
கறுப்புப் பணம்
உருவெடுக்க;
பாமரன் கண்ணீர் வடிக்க!
ஆகாதக் காரியங்களை
ஆட்டிப்படைக்க;
ஆடாதத் தலையும்
அசைந்தாடுமே;
ஊழல்கள் கூத்தாடுமே!
வளரும் தேசத்தை
முடமாக்கும்;
அதிகாரம் வர்க்கம்
இசைந்தாடும்;
பொதுமக்கள்
வசைப்பாடும்!
பண முதலைகள்
பிரகாசிக்க;
ஊழல் பெருச்சாளிகள்
பெருத்து நிற்க;
பாவப்பட்ட விலங்கினங்கள்
பலிக்கடாவாய்;
சொல்லிக்காட்ட உதாரணமாய்!
18 ஜன., 2011
தமிழகத்தில் முதல் முஸ்லிம் மருத்துவக் கல்லூரி..!
நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா - வக்ப் வாரியம் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட உள்ள மருத்துவ கல்லூரி பற்றிய கடலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று(17-ஜனவரி-2011) பத்து மணியளவில் சிதம்பரம் M.Y.M. பைசல் மஹாலில் நடைபெற்றது.
நீடூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல பிரதான ஊர்களில் ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவ்வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிதம்பரம் கூட்டத் தில் வக்ப் வாரியத் தலைவர் டாக்டர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் , ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முகம்மது யூனுஸ், சிக்கந்தர், சிதம்பரம் தாலுகா இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் இஸ்மாயில் நாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான்:
கேரளாவில் ஏழு, ஆந்திராவில் நான்கு கர்நாடகாவில் நான்கு என முஸ்லிம்கள் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் நிலையில் தமிழகத்தில் ஒன்று கூட இல்லாத இழி நிலையை போக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளதாக கூறினார். தொழில் புரட்சியின் போது வாளாவிருந்து உலக முன்னேற்றத்தில் தங்கள் பங்கை இழந்த முஸ்லிம்கள் தற்போது நடைபெற்று வரும் தொழில்நுட்பப் புரட்சியிலும் சோம்பி இருந்தால் வரலாறு அவர்களை புறந்தள்ளி விடும்என்று எச்சரித்தார்.
பல்வேறு முஸ்லிம் தனியார் நிறுவனங்கள் வக்ப் இடத்தில் மரு த்துவ கல்லூரி அமைக்க அனுமதி கேட்டு வந்த போதும் தான் அதனை சமுதாய நலனுக்காக மறுத்து விட்டதாகவும் தற்போது பொதுநலன் மற்றும் பொதுத்தளத்தில் நின்று இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது எனவும் கவிக்கோ கூறினார். இதனை ஒரு மருத்துவக் கல்லூரியாக மட்டுமின்றி மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்து கூறுகளும் உள்ளடக்கிய ஒரு மருத்துவப் பல்கலைகழகமாக நிர்மாணிப்பதற்கே தான் விரும்பவதாகவும் தெரிவித்தார். மருத்துவக் கல்லூரி பற்றிய ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் ஒளி ஒலி காட்சி ப்ரஜக்டர் மூலம் போட்டு காண்பிக்கப்பட்டது. அதில் மருத்துவகல்லூரியின் ஒவ்வொரு ஆண்டு நிலை, எதிர்பார்ப்பு, வளர்ச்சி திட்டம் போன்ற அனைத்து அம்சங்களும் விளக்கப்பட்டிருந்தன.
முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் 160 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் பல்வேறு தனி நபர்கள், ஜமாஅத் மற்றும் அமைப்புக்கள் போன்றவற்றிலிருந்தும் பங்குகள் வந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பிறகு இது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
MECCA (Muslim Educational Charitable with Care and Aid) Trust என்று ஒன்று உருவாக்கப்பட்டு அந்த டிரஸ்ட்டே (50 உறுப்பினர்கள் கொண்டது) இந்த மருத்துவ கல்லூரியை நிர்வகிக்கும் என்றும் அந்த ட்ரஸ்ட்டில் மிஸ்பாஹுல் ஹுதாவை சார்ந்த ஒரு நபரும் வக்ஃப் சார்பில் ஒரு நபரும் இருப்பர் மீதமுள்ள நாற்பத்திஎட்டு பேரும் இதற்காக பொருளுதவி செய்தவர்களிலிருந்தே தேர்வு செய்யப்படுவர் என்றார் கவிக்கோ. இதனை மிஸ்பாஹுல் ஹுதாவும் வக்ஃபும் இணைந்து செய்கின்றன என்பது இவ்விதமே என்று விளக்கினார். ஆட்சி மாற்றம் எந்த விதத்திலும் இதனைப் பாதிக்காது என்றும் விளக்கி கூறினார்.
ஹிதாயத்துல்லாஹ் பேசுகையில் ஸதகத்துல் ஜாரியா வகையில் வரும் இந்த உயரிய நற்செயலுக்குப் பொருளும் ஆதாரமும் வழங்குவதில் உள்ள மறுமைப் பலன்கள் குறித்து விளக்கிப் பேசினார். இறுதியாக, பலர் தங்களது பங்களிப்பினை கவிக்கோ அவர்களிடம் செலுத்தினார்கள்.
பிறகு உணவு உபசரிப்புடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
நன்றி: www.mypno.blogspot.com
நன்றி: www.mypno.blogspot.com
பிச்சாவரத்தில் காணும் பொங்கல்: படகு சவாரி
பரங்கிப்பேட்டையை அடுத்த பிச்சாவரத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.26 லட்சம் ரூபாய் படகு சவாரியில் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையம் 3,000 ஏக்கர் பரப்பளவில் கடலுக்கும் ஆற்றுக்கும் இடையில் சதுப்பு நிலத்தாவரங்களால் சூழப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள வனங்களைப் பாதுகாக்க தமிழக அரசு சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மூலிகைத் தாவரங்கள் நிறைந்த பிச்சாவரம் வனப் பகுதியில் படகில் சென்று வருவதால் மனதுக்கும் உடலுக்கும் இதமான புத்துணர்ச்சி கிடைக்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு பிச்சாவரம் படகு சவாரிக்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை,கோவை, சென்னை உட்பட பெருநகரங்களில் இருந்தும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தனர். காலை 7 மணி முதல் படகு சவாரிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகளவில் பயணிகள் குவிந்ததால் முன்பதிவு செய்து மூன்று மணி நேரம் வரை காத்திருந்து படகு சவாரி செய்தனர். மாலை 6 மணி வரை படகு சவாரிக்கு அனுமதி என்பதால் பகல் 3 மணிக்கு புக்கிங் முடிந்தது. மாலையில் வந்த பல சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். .
17 ஜன., 2011
இறப்புச் செய்தி
ஹக்கா சாஹிப் தர்கா தெருவில் மர்ஹூம் நூருல்லாஹ் சாஹிப் அவர்களின் மகளாரும், மர்ஹூம் அப்துல் வதூத் சாஹிப் அவர்களின் மனைவியும், முஹைய்யதீன் சாஹிப் அவர்களின் தாயாருமாகிய ஹைருன்னிஸா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம், ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
16 ஜன., 2011
எது சிறப்பு!
மலரதனின் சிறப்பென்றால் மகிழ்ச்சித் தோற்றம்
மனங்கனியச் செய்வதிலே மிகவும் ஏற்றம்
நிலவதனின் சிறப்பதுவோ நிலைகள் மாற்றம்
நிறைந்தாலும் மறைந்தாலும் நிலைக்கும் ஆற்றல்
உலகமிதன் சிறப்பென்ன? வேறு பூக்கள்
ஒருசேரப் பூத்திருக்கும் இயற்கைப் பூங்கா
உலவுகின்ற தென்றலுக்கும் உண்டே பேறு
உள்ளபடி பொதுவுடமை விளங்கும் காற்றே
.
தலைமையதன் சிறப்பென்றால் தகுதி காத்தல்
தக்கபடி பணிமுடிக்க தேரும் ஆட்கள்
கலைமனதின் சிறப்பிங்கே கற்பின் வாய்மை
கலங்காமல் ஒளிவீசும் கனலின் தூய்மை
அலைமுழக்கம் சிறப்பில்லை: ஆழி என்றால்
ஆழம்தான் சிறப்பாகும் அறிஞர் போல!
நிலைமறந்தே ஆடுவோரின் நினைப்பைக் கூட
நீக்கிவிடும் சிறப்பிங்கே நல்லோர்க் காமே
நண்பர்தம் சிறப்பெல்லாம் நலமே செய்தல்
நம்பிக்கை நீட்டியொரு நேசம் பெய்தல்
மண்ணிதனின் சிறப்பிங்கே மனிதம் ஓங்கல்
மற்றவரும் தன்போன்றே மனதில் கொள்ளல்.
கண்விழிகள் சிறப்படையும் காணும் நோக்கில்
கருத்தான ஏதொன்றும் கவர்ந்துக் கொண்டால்.
பெண்ணவளும் சிறப்பன்றோ பேணும் தாய்மை
பொறுமையினால் அடைகின்றாள் பெரிய வெற்றி.
சிலமனிதர் சிறப்பின்றி சின்ன புத்தி
சிந்தையிலே சுயநலமே செய்யும் உத்தி
பலமனிதர் சிறப்பிங்கே பாவம் ஐயோ.
பண்பாட்டைச் சிதைப்பதிலே பெருமை கொள்வார்
உளமகிழச் செய்வதுவே உயர்ந்தோர் செய்கை
ஒருவரையும் இகழாமல் உணரும் போக்கு.
புலவரிவர் சிறப்பிங்கே பொறுமை காத்து
புகழோங்க கவிவானில் ஒளிரும் பாடல்!
நன்றி: www.ezuthovian.blogspot.com/
இப்னு ஹம்துன்
15 ஜன., 2011
ஓட்டுநர் உரிமம்: தேர்வில் மாற்றம் - துபாய் அரசு அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் எமிரேட்ஸ்களில் ஒன்றான துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான ஆரம்பக்கட்ட தேர்வில் மாற்றம் கொண்டுவந்துள்ளதாக துபாய் அரசு அறிவித்துள்ளது. முன்னர் வழக்கதிலிருந்த ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் முதல் கட்டமாக போக்குவரத்து அடையாள தேர்வு(சிக்னல் டெஸ்ட்) நடத்தப்படும். தற்பொழுது அதற்கு பதிலாக 35 கேள்விகள் அடங்கிய எழுத்துத் தேர்வு நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முதல் கட்டமாக விண்ணப்பதாரர் இந்த எழுத்துத் தேர்வில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும். துபாய் எமிரேட்ஸின் ஐந்து ஓட்டுநர் மையங்களிலும் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்துத்துறை உரிம முகமைத் தலைவர் அஹ்மத் ஹாஷிம் பெஹ்ருஸைன் தெரிவித்தார். விண்ணப்பதாரரின் அறிவும், சாலை அடையாளங்கள்(சிக்னல்) குறித்த விழிப்புணர்வு மட்டுமல்ல பாதுகாப்பாக எவ்வாறு வாகனத்தை ஓட்டுவது, சாலை விபத்துக்களை எவ்வாறு தவிர்ப்பது என்பதுக் குறித்த கேள்விகளும் எழுத்துத் தேர்வில் இடம்பெறும் என பெஹ்ருஸைன் தெரிவித்துள்ளார். சாலை தேர்விற்கான பதிவு செய்வதற்கான வசதி துபாயின் ஐந்து ஓட்டுநர் மையங்களிலும் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு ஆர்.டி.எ(துபாய் சாலை மற்றும் போக்குவரத்துத்துறை இணையதளம்) வெப்ஸைட் மூலமாகவும், இலவச சேவை எண் மூலமாகவும்(டோல் ஃப்ரீ நம்பர்) பதிவுச்செய்ய வசதிச் செய்யப்பட்டுள்ளது என பெஹ்ருஸைன் தெரிவித்தார். செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் |
13 ஜன., 2011
தேர்தல் 2011 :"வாங்க, பேசலாம்"- கம்யூ.க்களிடம் ஜெ.
எதிர்வரவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்கள் தயாராகி வரும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. இதன்பொருட்டு ஹேஷ்யங்களும் ஹாஸ்யங்களுமாக அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
முதற்கட்டமாக, அதிமுகவும் தேமுதிகவும் கூட்டணி சேரக்கூடும் என்று யூகங்கள் கொடி கட்டிப் பறந்த நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா தமது பொதுக்குழுவில் "கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். சொல்லிவைத்தாற்போல அதே வார்த்தைகளையே சேலத்தில் நடைபெற்ற தம்கட்சியின் "உரிமை மீட்பு மாநாட்டில்" உச்சரித்திருந்தார் விஜயகாந்த். "கூட்டணி பற்றி என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்".
கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் கூட, சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஜெயலலிதா கூறினாரே தவிர, ஏற்கெனவே கூட்டணியில் உள்ளதாகக் கூறப்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.வுடன் பேச்சு நடத்துவது பற்றி எதுவும் கூறவில்லை.
நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.வுடன் உடனடியாக பேசுவதை அ.தி.மு.க. தவிர்ப்பதாகவும் அப்போது பேச்சு எழுந்தது.
இந்நிலையில், சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக அறிவித்து விட்டுச் சென்றார். தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இடையேயான கூட்டணி முறிய எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதை இரு கட்சிகளும் உறுதியாக தெரிவித்து விட்டன.
இந்த சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளையும் கூட்டணி பற்றி பேச வருமாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். இதை மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சென்னையில் திங்கள்கிழமை உறுதி செய்தார்.
தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் அணிக்கு எதிராக ஒரு உறுதியான அணியை நாமெல்லாம் சேர்ந்து அமைக்க வேண்டும் என்று தன்னிடம் தொலைபேசி மூலம் ஜெயலலிதா கூறியதாக பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கூட்டணி பற்றி முடிவு செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் நடைபெறுகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.இந்தக் கூட்டங்களில் மாநிலக் குழு உறுப்பினர்கள், கட்சியின் மாநில நிர்வாகிகளோடு, அகில இந்திய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
அடுத்த சில நாள்களில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் தனித்தனியாக சந்தித்துப் பேசுவார்கள் என்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி நமது சென்னை நிருபர் தெரிவிக்கிறார்.
நன்றி;இந்நேரம்.காம்
12 ஜன., 2011
L K G - நுழைவுத் தேர்வுக்கு 'தடா' - கல்வித்துறை அதிரடி!
எல்.கே.ஜி எனப்படும் பாலர் கீழ்நிலைக்கல்விக்கும் தமிழகத்தில் சில பள்ளிகள் நுழைவுத்தேர்வையும் நன்கொடையையும் மேற்கொள்வதாக தெரியவருகிறது.
இந்நிலையில் இது குறித்து கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில்,
6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்கப்படவேண்டியது அரசின் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதும், சர்வ சிக்சா அபியான் என்ற அந்தத் திட்டத்துக்கு நிதியுதவி குறிக்கத்தக்கது
இந்நிலையில் இது குறித்து கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில்,
ஜுலை 1-ந்தேதி 3 வயது நிரம்பிய குழந்தைகள் எல்.கே.ஜி.யில் சேர தகுதி உடையவர்கள். அவர்களை எல்.கே.ஜி.யில் சேர்க்க எந்த வித நுழைவுத்தேர்வும் நடத்தக்கூடாது. அவர்களின் பெற்றோர் படித்திருக்கிறார்களா என்று கேட்கக்கூடாது. விண்ணப்ப கட்டணம் ரூ.50க்கு மேல் இருக்கக்கூடாது. மாணவர்சேர்க்கைக்காக நன்கொடை வசூலிக்கக்கூடாது. பள்ளிக்கூடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு புகையிலைபொருட்கள் விற்கக்கூடாது. புகை பிடிக்கவும் கூடாது. பள்ளிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
பாலக மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை ஆசிரியர்கள் வேலை ஏவவோ, . அடிக்கவோ கூடாது. நான் இங்கு கூறியவற்றை ஏற்கனவே பல முறை பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் மூலம் தெரிவித்துள்ளோம்.என்று தெரிவித்துள்ளார்.
6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்கப்படவேண்டியது அரசின் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதும், சர்வ சிக்சா அபியான் என்ற அந்தத் திட்டத்துக்கு நிதியுதவி குறிக்கத்தக்கது
பரங்கிப்பேட்டை அருகே சாலை மறியல்.- வெள்ள நிவாரணம் கோரி!
வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, கடந்த இருவாரங்களுக்கு முன், பரங்கிப்பேட்டை பு.முட்லூரில் கடலூர் - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் வகையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்ற போது அனைவருக்கும் நிவாரணம் வழங்குவோம் என வருவாய்த் துறையினர் உறுதியளித்திருந்தது தெரிந்ததே.
இதைத் தொடர்ந்து நிவாரணம் வழங்க வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பு.முட்லூர், மஞ்சக்குழி பகுதிகளில் கணக்கெடுத்தும் கணக்கெடுத்ததை விட குறைவான நபர்களுக்கு வழங்கப்பட்டதாக முறையீடுகள் வந்தன.
இதன் தொடர்ச்சியாக நேற்று பரங்கிப்பேட்டையின் வாயிலாகக் கருதப்படும் பு.முட்லூரில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் சார்பாக, நேற்று பு.முட்லூர் ஜவுளிக்கடை பஸ் நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வடக்கு வட்ட செயலர் சண்முகசுந்தரம் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கடலூர் - சிதம்பரம் சாலையில் மறியிலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாவட்ட காவல் அதிகாரி மோகன், ஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டாட்சியரே நேரடியாக வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்ததால் வட்ட ஆட்சியர் காமராஜ் சம்பவ இடத்திற்கு வந்து இன்னும் இரண்டு நாட்களில் ஏற்கனவே எடுத்த கணக்கெடுப்பின்படி நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
அதன்பின் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 10.50 முதல் மதியம் 12.10 மணி வரை போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நிவாரணம் வழங்க வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பு.முட்லூர், மஞ்சக்குழி பகுதிகளில் கணக்கெடுத்தும் கணக்கெடுத்ததை விட குறைவான நபர்களுக்கு வழங்கப்பட்டதாக முறையீடுகள் வந்தன.
இதன் தொடர்ச்சியாக நேற்று பரங்கிப்பேட்டையின் வாயிலாகக் கருதப்படும் பு.முட்லூரில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் சார்பாக, நேற்று பு.முட்லூர் ஜவுளிக்கடை பஸ் நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வடக்கு வட்ட செயலர் சண்முகசுந்தரம் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கடலூர் - சிதம்பரம் சாலையில் மறியிலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாவட்ட காவல் அதிகாரி மோகன், ஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டாட்சியரே நேரடியாக வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்ததால் வட்ட ஆட்சியர் காமராஜ் சம்பவ இடத்திற்கு வந்து இன்னும் இரண்டு நாட்களில் ஏற்கனவே எடுத்த கணக்கெடுப்பின்படி நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
அதன்பின் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 10.50 முதல் மதியம் 12.10 மணி வரை போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
10 ஜன., 2011
வெங்காய வேலை நிறுத்த போராட்டம் .
இந்தியாவின் மிகப் பெரிய வெங்காய் மார்கெட்டான நாசிக் வெங்காய மார்கெட்டில் இரண்டுதினங்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வெங்காய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் வெங்காய விற்பனையாளர்கள் கடை மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனை தமிழகம் உட்பட சிலமாநிலங்களில் நடத்தப்பட்டது இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக நாசிக் மாவட்ட வெங்காய விற்பனையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் வெங்காய விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெங்காய விற்பனையாளர்கள் கடை மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனை தமிழகம் உட்பட சிலமாநிலங்களில் நடத்தப்பட்டது இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக நாசிக் மாவட்ட வெங்காய விற்பனையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் வெங்காய விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மூனா கல்வி நிறுவனத்தில் இலவச கணிணி பயிற்சி வகுப்புகள் துவக்கம்
பரங்கிப்பேட்டை மூனா கல்வி நிறுவனம் சார்பில், அதன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச கணிணி சிறப்பு பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளுக்கும் கணிணி அறிவை வளர்க்கும் நோக்கில் துவங்கப்ட்ட இப்பயிற்சி வகுப்பு திட்டத்திற்கு "க்ளிக் வேர்ல்டு க்ளிக்" ("Click-World-Click") என்று பெயரிடப்பட்டுள்ளது. மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் முதல்வர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி திட்டத்தினை எம்.ஜீ.ஃபக்ருத்தீன் துவக்கி வைத்தார்.
இப்பள்ளியில் போதிய கணிணி ஆய்வுகூடம் வசதியுடன் இருப்பதாலும், தொடர் கண்காணிப்பு அடிப்படையிலான செயல்திட்டம் இருப்பதினாலும் அடிப்படை கணிணி பயிற்சி மட்டுமின்றி இதர மென்பொருள் வகுப்புகளுக்கும் தொடர்ந்து இலவச பயிற்சியுடன் சான்றிதழ்களும் அளிப்போம் என்று பள்ளி முதல்வர் பிரதீப் குமார் தெரிவித்தார்
நன்றி
9 ஜன., 2011
சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம்
பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.கழகம் சார்பில் சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நேற்று மாலை சஞ்சீவிராயர் கோயில் தெருவில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
சிறப்புரையாற்றிய தலைமைக்கழக பேச்சாளர் நெய்வேலி விக்கிரமன், தனது உரையில் தி.மு.கழக அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கினார், தொடர்ந்து பேசுகையில் தமிழகத்தின் முன்னணி நாளேடுகள், வார இதழ்கள் தி.மு,க-விற்கு எதிரான நிலையினை கொண்டிருப்பதாக குறிப்பிட்டு தனது அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தினார்.
இக்கூட்டத்தில், தி.மு.க ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான முத்து.பெருமாள், புவனகிரி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் வழக்கறிஞர் செல்வராஜ், மாவட்ட தி.மு.க பிரதிநிதியும், நகர இளைஞர் அணி அமைப்பாளருமான முனவர் உசேன், மாவட்ட பிரதிநிதி காண்டீபன், நகர செயலாளர் பாண்டியன், கோமு, ராஜீ, ஆரிபுல்லாஹ், பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், சண்முகம், மாரிமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்
சிறப்புரையாற்றிய தலைமைக்கழக பேச்சாளர் நெய்வேலி விக்கிரமன், தனது உரையில் தி.மு.கழக அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கினார், தொடர்ந்து பேசுகையில் தமிழகத்தின் முன்னணி நாளேடுகள், வார இதழ்கள் தி.மு,க-விற்கு எதிரான நிலையினை கொண்டிருப்பதாக குறிப்பிட்டு தனது அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தினார்.
இக்கூட்டத்தில், தி.மு.க ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான முத்து.பெருமாள், புவனகிரி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் வழக்கறிஞர் செல்வராஜ், மாவட்ட தி.மு.க பிரதிநிதியும், நகர இளைஞர் அணி அமைப்பாளருமான முனவர் உசேன், மாவட்ட பிரதிநிதி காண்டீபன், நகர செயலாளர் பாண்டியன், கோமு, ராஜீ, ஆரிபுல்லாஹ், பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், சண்முகம், மாரிமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்
8 ஜன., 2011
ஒரு கண்ணாடி அகம் காட்டுகிறது..
இப்னு ஹம்துன் |
உணவுக்குப் பஞ்சமில்லை..
உடுப்புகளும் குறைவில்லை..
உறைவிடமோ ஒரு பிரச்னையில்லை..
முக்கால்வாசி உலகத்தாரினும்
மேலானவன் நீ - மிகையில்லை.
வங்கியில் கணக்குண்டு
வார்கச்சையிலும் இருப்புண்டு
சில்லறைச் செலவுகளுக்கோ
சஞ்சலங்கள் ஒருபோதுமில்லை!
சிறிய அந்த செல்வந்த உலகினில்
செல்லத்தக்க உறுப்பினர் தான் நீ..!
அதிகாலை விழிக்கின்றாய்
ஆரோக்யம் உணர்கின்றாய்!
ஆசிர்வதிக்கப்பட்டவனல்லவா நீ
இந்த வாரம் இல்லாமல் போன
ஒரு பத்து இலட்சம் பேரினும்!
யுத்த முகம் கண்டதில்லை
இரத்த ஓலம் கேட்டதில்லை!
பட்டினிப்பெருங்கொடுமை
பரிதவிப்பின் பெருந்துயரம்
பாதிப்புகள் உனக்கில்லை..!
பாதி உலகின் மக்களைக் காணினும்
பேறு பெற்றவன் நீ
அன்பு மிக்க பெற்றோருனக்குண்டு
பண்பு நிறை மனைவியோ - உன்
பெருமைகளின் மகுடம்!
ஆசிர்வதிக்கப்பட்டவைஉன் குழந்தைகள்
அபூர்வமானவர்களில் நீ!
'எழுதப் படிக்கத் தெரியாதவர்
இருபது கோடிப் பேராம்'
வாசிக்கும் நீ யோசிப்பதுண்டா?
எத்தனை பெருமிதம் எனக்கு" என்று!
புன்னகை வசிக்கும் உன் முகம்
இதயமும்
இறைநன்றியை உச்சரித்தே
இயங்கட்டும் என்றும்!
நன்றி வார்ப்பு
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com