-
PORTONOVO MASJID
This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]
-
MARINE BIOLOGY
This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]
-
PORTONOVO LIGHT HOUSE
This is the PORTONOVO LIGHT HOUSE. [...]
- #
#
30 நவ., 2010
குளிர்க்கு தீமூட்டியவர்கள் இறப்பு
வேண்டாத தொல்லை ...
29 நவ., 2010
இறப்புச் செய்தி
28 நவ., 2010
தமிழக மேல் சபை தேர்தல் (M.L.C)
இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம் (Part Time) மற்றும் தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்
எங்கு விண்ணப்பிப்பது?
மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்
பிற பகுதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் படிவம் 18 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்யலாம் http://www.elections.tn.gov.in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.
உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்
கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.
1.பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )
2. மதிப்பெண் சான்றிதழ்,
3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்
3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.
மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம்.ஆனால் (மூல சான்றிதழை உடன் கொண்டுச்செல்லவேண்டும்)சான்றிதழை நகல் (Zerox copy) எடுத்து அரசுக் கல்லூரி முதல்வர், நகராட்சி கமிஷனர், யூனியன் பி.டி.ஓ., தாசில்தார்கள் இதில் ஒருவரிடம் கையொப்பம் வாங்கி சமர்பித்தால் போதும்.
மேலும் விபரங்கள் மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.html தெரிந்துகொள்ளலாம்.
27 நவ., 2010
தொடரும் மழை..!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
கடலோர கர்நாடகா, தெற்கு கடலோர ஆந்திராவில் ஒரு சில இடங்களிலும் ராயலசீமாவில் ஓரிரு இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என்றும் சில சமயங்ளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சிறுமியை நாள் முழுவதும் வன்புணர்ந்த ஜெயில் ஊழியர்கள்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமியை கடத்தி ஒருநாள் முழுவதும் ஜெயில் ஊழியர்கள் வன்புணர்ந்த கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உ.பி மாநிலம் ஆக்ரா அருகே உள்ள தாஜ்சிட்டியில் நேபாளத் தம்பதிகள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்கு கூலி வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று அவரது மகள் ரூபா மளிகைக்கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தாள். அப்போது ஆக்ரா ஜெயிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சியாம்வீர், ராகுல், அனில், நசிர் ஆகிய நால்வரும் எதிரில் வந்துக்கொண்டு இருந்தனர்.
அவர்கள் சிறுமி ரூபாவை பார்த்ததும் அவளிடம் பேச்சுக்கொடுத்து மறைவான ஒர் இடத்திற்கு அழைத்து சென்று ஒருநாள் முழுவதும் வன்புணர்ந்து இருக்கின்றனர். இதில் மயக்கம் அடைந்த சிறுமியை தண்டவாளத்தின் அருகே போட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
இதற்கிடையே மகளை ரூபாவை காணாமல் நேபாள தம்பதி பல இடங்களில் தேடினார்கள். கடைசியில் பிச்புரி என்ற இடத்தில் ரெயில் தண்டவாளத்தின் அருகே சிறுமி மயங்கிய நிலையில் இருப்பதை கண்டனர். அவளை மீட்டு விசாரித்தபோது அப்போது ரூபாவை 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை வன்புணர்ந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் மகளை அழைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று புகார் செய்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் மயங்கிய நிலையில் இருந்த ரூபாவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையும் மருத்துவ பரிசோதனை நடந்தது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்திய பின்பு இந்த சம்பவத்தில் ஜெயில் ஊழியர்கள் நால்வர் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
இவர்கள் நான்கு பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதில் சியாம் வீர் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இடியோசை
இறப்புச் செய்தி
26 நவ., 2010
மழைக்கால மாலைப்பொழுது...
நாளை மின் நிறுத்தம்..
25 நவ., 2010
கல்வி இயக்கமாகச் செயல்படுவோம்…! CMN சலீம்
கடந்த 10 ஆண்டுகாலமாக தொலைக்காட்சி ஊடகம் மூலம் சிவிழி நிறுவனம் இந்தக் கருத்தை வலியுறுத்தியே முஸ்லிம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதற்காகவே தொடங்கப்பட்ட சமூகநீதி அறக்கட்டளை கடந்த 5 ஆண்டு காலமாக முஸ்லிம்களிடம் கல்விப் புரட்சி ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காகவே உழைத்து வருகிறது.
இதுவரையிலும் தமிழகத்தின் 31 மாவட்டங்களிலும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கங்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், மாணவர்களுடன் கலந்தாலோசனை, பயிற்சி முகாம்கள், இவற்றோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மாத இதழ், ஆண்டுதோறும் உயர்கல்வி வழிகாட்டி மலர்கள் என்று எங்களின் சக்திக்கு உட்பட்டு கிடைக்கப்பெற்ற 24 மணி நேரமும் இத்தகைய பணிகளில் தான் உழைத்து வருகின்றோம்.
இது அல்லாமல் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் முஸ்லிம்களிடத்திலும் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். எங்களின் வேண்டுகோளை ஏற்று அந்ததந்தப் பகுதிகளில் கல்விப் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்தவர்களும் எங்களோடு தோளோடு தோள் நின்று உழைத்து வரக்கூடிய சகோதரர்களும் கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்தப் பணிகளை இன்னும் வேகமாகவும வீரியமாகவும் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்க்கும் மாற்றம் சிறிதளவேனும் நமது சமுதாயத்தில் ஏற்படும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
நமது முக்கிய இலக்கும் களப்பணிகளும் :
1. இன்ஷா அல்லாஹ் 2030க்குள் தமிழக முஸ்லிம்களின் பள்ளிக் கல்வி முறை அடியோடு மாற்றப்பட வேண்டும். அல்குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமியக் கலாச்சாரம் இவற்றின் பேணுதலோடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியைத் திறனோடு படிக்கும் சமூகமாகவும் மாற்றப்பட வேண்டும்.
2. 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் வாய்ப்புள்ள மதரஸாக்கள் கூடுதலாகத் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட வேண்டும். அவற்றில் நவீன அரபு மொழியும், உயர்ந்த ஆங்கில மொழி அறிவும் திறனோடு கற்றுத் தரப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் தரம் மிகுந்த மதரஸாக்கள் தனியார்களால் வணிக நோக்கோடு முதலீடு செய்யப்பட்டு அதிகம் உருவாக்கப்பட வேண்டும்.
3. கல்வி இடை நிறுத்தம் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
4. அரசின் அதிகாரமிக்க துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு அதிகளவு கல்வி நிதியுதவி தாராளமாக செய்யப்பட வேண்டும்.
5. சமூகம் மறுமலர்ச்சி அடைவதற்கு அடிப்படைத் தேவையான பெண்கள் மார்க்க அறிவோடு உயர்கல்வியையும் பெற வேண்டும்.
சமுதாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்யும் இத்தகைய பணிகள் விரிவாக தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் பரவலாக செய்யப்பட்டால் மட்டுமே பலன் கிடைக்கும். ஒரு ஊரில் ஆண்டிற்கு ஒரு கல்வி விழிப்புணர்வு கூட்டம் நடத்துவதால் மட்டும் எவ்வித பலனும் ஏற்படாது. வழிகாட்டுதலும் ஊக்கப்படுத்துதலும் தொடர் சங்கிலியாய் இளைய தலைமுறைக்கு எந்நேரமும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
உலகம் போகின்ற வேகத்தோடு முஸ்லிம்களும் முன்னேற வேண்டும். முஸ்லிம்கள் அறிவாற்றலைப் பெற்றால்தான் இஸ்லாமிய மார்க்கத்தை முன்நிலைப்படுத்த முடியும்.
‘இஸ்லாத்தைப் பயின்றதுடன் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் ஒரு சேரப் பயிலுவதே முஸ்லிம்களுக்கு ஆகுமாக்கப்பட்ட கல்வி முறை’
மக்கள் இயக்கமாக மாற்றப்படாத எந்த ஒரு கருத்தியல் கோட்பாடும் வெற்றி பெற்றதாகச் சான்று கிடையாது.
முஸ்லிம்களிடம் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இந்தியச் சமூகத்தில் முன்னேறிய சமூகமாக தமிழ் முஸ்லிம் சமூகம் மிளிர்வதற்கு ஆக்கப்பூர்வமான பணியாக இதைத் தவிர வேறு எதுவும் நம்முன் இருப்பதாகத் தெரியவில்லை.
இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் ஒத்த கருத்துடைய, சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள சகோதரர்கள்/சகோதரிகள் அனைவரையும் ஒன்றுபடுத்தி எல்லா மாவட்டங்களிலும் உள்ள சமூகக் கல்வி ஆர்வலர்கள் துணையோடு கல்விப் பணியை இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் செய்யலாம் என்ற சிந்தனை ஏற்பட்டுள்ளது.
இந்த சமூகப் புரட்சிப் பணியில் எங்களோடு இணைந்து பணியாற்ற விரும்பும் சகோதரிகள் அனைவரோடும் இன்ஷா அல்லாஹ் ஜனவரி மாத இறுதி வாரத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்தாலோசனை செய்ய உள்ளோம்.
நிலையான அறத்தைப் பெற்றுத் தரும் இந்தப் பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
முஸ்லிம்களை பாரம்பர்ய கல்வி முறைக்கு மாற்றுவோம்!
வெள்ளையர்களின் சூழ்ச்சியை வேரறுப்போம்!
இனிவரும் நூற்றாண்டின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஆற்றலும் வல்லமையும் இஸ்லாம் ஒன்றுக்கு மட்டுமே உள்ளது என்பதைக் கருத்தால் நிலைநிறுத்துவோம்!
24 நவ., 2010
இறப்புச் செய்தி
மழையோ...மழை...!
23 நவ., 2010
கடலூரில் முழு அடைப்பு போராட்டம்
40 கோடி ரூபாய் செலவில் கடந்த 4 ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், இதுவரை முடிவு பெறவில்லை. இந்த திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக பாதள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடலூர் நகரில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இறப்புச் செய்தி
21 நவ., 2010
காற்றழுத்த தாழ்வு நிலை
20 நவ., 2010
சிறப்பு மருத்துவ முகாம்...
தமிழக அரசின் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக வருமுன் காப்போம் திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை 9.00 மணி முதல் கும்மத்பள்ளி தெரு பள்ளிக்கூடத்தில் நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவர்கள், கிள்ளை மற்றும் புதுச்சத்திரம் மருத்துவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மாலை வரை நடைப்பெற்ற இம்மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்
கண் தானம்
பரங்கிப்பேட்டை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவகாமி அம்மாள் (76) புதன்கிழமை காலமானார். இவரது கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன், பரங்கிப்பேட்டை அரிமா சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்தனர்.
நன்றி: தினமணி
19 நவ., 2010
இறப்புச் செய்தி
பரங்கிப்பேட்டை தெத்துக்கடை தெருவில் மர்ஹூம் முஹம்மது அலி கான் அவர்களின் மகனாரும், ரசூல் கான், சுலைமான் கான், சாதாத் கான் ஆகியோர்களின் சகோதரரும், கஃப்பார் அலி கான், பிஸ்மில்லாஹ் கான், ஹபீபுல்லாஹ் கான் ஆகியோர்களின் தகப்பனாரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான அபா கான் என்கின்ற முஹம்மது கான் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
என் குழந்தைக்காக..
பணம் தின்னிகள் பற்றிய வயித்தெரிச்சல் பதிவு