ஹம்துன் அஷ்ரப்

23 டிச., 2010

சாணக்கிய அரசியல்வாதி..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், டிசம்பர் 23, 2010 No comments


கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன்(92)  காலமானார்.  கேரளா மாநிலத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர் கருணாகரன் என்கிற பெருமைக்குறிய மனிதர்.  காங்கிரஸின் மூத்த தலைவரான இவர் மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.


காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்பட்டதால் கடந்த 10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் கடந்த சில நாள்களுக்கு முன் அவரது உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் ஆனந்தபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கருணாகரனுக்கு நேற்று காலை பக்கவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. எனினும் இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் இயக்கம் சீராக இருந்தது. அவரது உடல் நிலையை ஆனந்தபுரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.




1991ல் ராஜிவ் படுகொலைக்குப் பின், தேர்தலில் நாடு முழுவதும் அதிக இடங்களில் காங்., வெற்றி பெற்றது. கருணாகரன் மீண்டும் முதல்வரானார். கருணாகரன் முதல்வராக இருந்த போது, 1993 முதல் 1995 வரையான காலத்தில், அந்தோணி தலைமையிலான அதிருப்தி கோஷ்டியினர், கருணாகரனுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அப்போது நரசிம்மராவ் அந்தோணி பிரிவை ஆதரித்ததால், கருணாகரன் 1995 மார்ச் 19ல் பதவி விலக நேரிட்டது. மூன்று முறை (1995, 1997 மற்றும் 2004) ராஜ்யசபாவுக்கும், இரு முறை (1998, 1999) லோக்சாபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995ல் மத்திய தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். 


கட்சி விரோத நடவடிக்கைக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர், 2005ல் தேசிய இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார். நீண்ட காலம் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த கருணாகரனின் பலமாக அவரது சாதுர்ய அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலின் சாணக்கியத்திலேயே அமைந்திருந்தது. எனினும் கட்சிக்குள் பிரிவுகள் ஏற்படுத்தி அதன் மூலம் தன் அரசியல் விருப்பங்களை பூர்த்தி செய்து கொண்டவர் என்றும் பலரால் விமர்சிக்கப்பட்டார் கருணாகரன். எனினும் தேசிய காங்கிரஸ் ஒரு சாணக்கிய அரசியல்வாதியை இழந்துவிட்டது.


0 கருத்துகள்: